சென்னை மணலி பகுதியை சேர்ந்த 65 வயதான திமுக பிரமுகர் சக்கரபாணி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு ராயபுரம் பகுதியில் வீடு எடுத்து அந்தப் பெண்மணியுடன் தங்கி வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் சக்கரபாணி காணவில்லை என அவரது குடும்பத்தார் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர் ராயபுரம் காவல் துறையினர்.
இதற்கிடையில் ராயபுரம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் உள்ளே சென்று சோதனையிட்டனர்.
அங்கு சாக்கு மூட்டையில் கை கால்கள் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க | பெண்களின் அந்தரங்க உறுப்பை பராமரிக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்
பின்னர் காவல்துறையினர் விசாரணையில் தமீம் பானு என்பவரது வீட்டில் சக்கரபாணி இருந்து வந்ததாகவும் அப்போது அவருடைய சகோதரர் வாஷிங் பாஷாவுக்கும், சக்கரபாணிக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததாகவும் தெரிந்தது.
மேலும், ஒரு கட்டத்தில் அருகிலிருந்த அருவாமனை கொண்டு சக்கரபாணியை வெட்டியுள்ளார். இதனை அடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி தலையை அடையாறு பாலத்திலும், உடல் பகுதிகளை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும், கை கால்களை மட்டும் வீட்டிலே வைத்துவிட்டு வாஷிங் பாஷாவும் அவரது சகோதரியும் தலைமறைவாகிவிட்டனர்.
பாஷாவை கைது செய்த ராயபுரம் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாஷா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலையை அடையாறு திரு.வி.க பாலத்தில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தீவிரமாக நள்ளிரவு முதல் தேடி வருகின்றனர்.
ராயபுரம் தனிப்படை போலீசாரின் மற்றொரு குழுவினர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரம் என்பதாலும் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதாலும் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது என்றும், அதனால் காலை பணிகள் தொடரும் என்றும் உதவி ஆணையர் வீரகுமார் தகவல் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அமிர்தவல்லி கல்லீரலை சேதப்படுத்துமா? ஆயுஷ் அமைச்சகத்தின் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR