மனிதநேயத்தின் உதாரணம்! 16 கோடி ரூபாய் ZOLGENSMA மருந்தை நன்கொடையாக பெற்ற குழந்தை

தஞ்சையைச் சேர்ந்த 2 வயது குழந்தை பாரதிக்கு பொதுமக்களிடமிருந்து  90 நாட்களில்  பெறப்பட்ட நன்கொடையில், 16 கோடி ரூபாய் விலையுள்ள "ZOLGENSMA" ஊசி செலுத்தப்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2021, 07:54 AM IST
  • மனிதநேயம் வாழ்கிறது
  • 2 வயது குழந்தைக்கு பொதுமக்கள் நன்கொடை
  • கிரவுட் ஃபண்டிங் மூலம் 16 கோடி ரூபாய் நன்கொடை
மனிதநேயத்தின் உதாரணம்! 16 கோடி ரூபாய் ZOLGENSMA மருந்தை நன்கொடையாக பெற்ற குழந்தை title=

மனிதநேயம் மரித்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் நிகழ்வுகள் எப்போதும் நெகிழச் செய்பவை.  தஞ்சையில் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை பாரதிக்கு பொதுமக்களின் நன்கொடை புதிய வாழ்க்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து 90 நாட்களில் பெறப்பட்ட நன்கொடையில் (Donations through crowdfunding), 16 கோடி ரூபாய் விலையுள்ள "ZOLGENSMA" ஊசி செலுத்தப்பட்டது

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சிராஜ் நகரில் வசித்து வரும் ஜெகதீஷ் - எழிலரசி தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை பாரதி. பாரதிக்கு இரண்டு வயது ஆன நடக்க முடியவில்லை. எனவே, மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனை பெற்றபோது பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

குழந்தை பாரதிக்கு முதுகு தண்டுவட தசை சிதைவு நோய் உள்ளதாகவும், அதற்கு 16 கோடி மதிப்பிலான ஜோல்ஜென்ஸ்மா எனும் மருத்து கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

medicine

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அந்த சிறப்பு மருந்தின் விலை பெற்றோருக்கு கவலை ஏற்படுத்தியது. தம்பதியினர் இருவரும் தனியார் வங்கியில் பணிபுரிபவர்கள்.அவர்களுக்கு 16 கோடி ரூபாய் என்பது எட்டாக்கனியாகும். 

இந்நிலையில் 16 கோடிக்கு வழி தெரியாமல் தவித்த குழந்தை பாரதியின் பெற்றோர்கள் பரிதாப நிலை குறித்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்தி பரவியது. 

இந்நிலையில் 90 நாட்களில் நாடு முழுவதிலும், பல்வேறு பகுதியில் இருந்து கருணை உள்ளம் கொண்டவர்களால் 16 கோடி நிதி கிடைக்கப்பெற்று, அதன்மூலம் அமெரிக்காவிலிருந்து தசைநார் சிதைவு சிகிச்சைக்கான மருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பாரதிக்கு, ZOLGENSMA மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து 90 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் குழந்தை பாரதி இருப்பாள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பாரதி பூரண குணமடைய வேண்டும் என்று சமூக ஊடகத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ | அத்தி மரத்தின் அருமையும், பெருமையும் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News