Cyclone Burevi: வங்கக்கடலில் உருவான புரெவி புயல், பாம்பனுக்கு 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. மன்னாருக்கு 40 கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 120 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புரெவி புயலின் தாக்கத்தால் மன்னார் கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் தாக்கத்தால் தென் தமிழகத்தில் பலத்த காற்று வீசுகிறது, கனமழையும் பெய்கிறது. பாம்பனை மையம் (Pamban) கொண்டு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் கணிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது பலத்த காற்று வீசுகிறது. இன்று பிற்பகல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதன் தாக்கம் தெரியும் என்றும் படிப்படியாக இது கன்னியாகுமரி (Kanyakumari) மாவட்டத்தை நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் கூறுகிறது.
ALSO READ | Cyclone Burevi: தமிழகத்தை நெருங்கும் புரெவி புயலால் பலத்த காற்று
தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் காரைக்கால் (Karaikal) மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இதனை அறிவித்தார்.
இதனிடையே தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலாய் தீபகற்பம் அருகே வளிமண்டல அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.
புரெவி புயல் (Cyclone Burevi) மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவானது. புதிய புயலுக்கு ‘புரெவி’ என்று பெயரிடப்பட்டது. திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. திரிகோணமலைக்கு 300 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டிருந்தது.
ALSO READ | பாம்பனுக்கு அருகே புரெவி புயல்: முழு மூச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
செவ்வாய்க்கிழமை மாலை புரெவி சூறாவளி புயலின் காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாக IMD-யின் சூறாவளி எச்சரிக்கை பிரிவு தெரிவித்திருந்தது.
தற்போது புரெவி புயல் காரணமாக பாம்பனில் 60 கி.மீ வேகத்தில் பலத்தக் காற்று வீசி வருகிறது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. தங்கச்சி மடம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
புயல் இன்று கரையைக் கடந்து செல்லும்போது, செல்லும் வழியெல்லாம் பலத்த காற்று வீசும், கனமழைய பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையை கடக்கும் என்பதால் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு புரெவி புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. நிவர் புயலின் போதும், NDRF குழுக்களால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உதவியாக இருக்கும்.
Also Read | புரெவி புயல் : அதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் இவையே- வானிலை மையம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR