சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. தொற்றின் பரவலைத் தடுக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தைப் (Tamil Nadu) பொறுத்தவரை, ஒரு நாள் தொற்றின் அளவில் சரிவைக் காண முடிந்தாலும், இதுவும் மிகப்பெரிய எண்ணிக்கையே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிலையில், தமிழக அரசைத் தவிர மற்ற அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்களாலான முயற்சிகளை எடுத்து மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த வகையில், சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை கொரோனா பரவலைத் தடுப்பதில் ஒரு வித்தியாசமான முன்முயற்சியை எடுத்துள்ளது. சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை ஒரு கொரோனா விழிப்புணர்வு கானா பாடலை வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு பல வித நல்ல கருத்துகளை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பாடலுக்கு ரயில்வே பாதுகாப்பு படையின் காவலர்கள் சேர்ந்து நடனமாடியுள்ளார்கள். தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசங்களை (Facemask) அணிவது, சானிடைசர்களை பயன்படுத்துவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது என கொரோனா காலத்தில் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களைப் பற்றியும் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. மகக்ள் நலன் கருதி தெற்கு ரயில்வே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
ALSO READ:காய்கறி, பழ வியாபாரிகள் வாகனத்தை போலீசார் தடுத்தால் இதை செய்யுங்கள்
இதற்கிடையில், திங்களன்று தமிழ்நாட்டில் 34,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 404 பேர் இறந்தனர். இதனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 20,872-ஐ எட்டியது. நேற்று 27,026 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 15,54,759 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,01,580 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 4985 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ALSO READ: தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சை மருந்து 100 குப்பிகள் ஒதுக்கீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR