கடந்த 19ம் தேதி நகர உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவானது நடைபெற்ற நிலையில் வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட வந்தவரை கையும் களவுமாக பிடித்தாக கூறி அவரது சட்டையை கழற்றி அழைத்து வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து இன்று திமுக-வை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்படி ராயபுரம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளிலும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவுகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கள்ள ஓட்டு சர்ச்சை - வாக்கை பதிவு செய்தார் எல்.முருகன்
இந்த இரு காவல் நிலையங்களிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலகம் செய்ய தூண்டுதல், காயம் ஏற்படுத்துதல் போன்ற 4 பிரிவுகள் பொதுவாக இருந்தாலும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் தொற்று நோய் பரப்புதல் உட்பட கூடுதலாக 4 பிரிவுகள் சேர்க்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிமுக தரப்பிலும் தங்களை தாக்க வந்ததாக கூறி திமுகவினர் மீது புகார் கொடுத்த நிலையில் திமுகவை சேர்ந்த 10 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருதரப்பிலும் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, சென்னை மந்தைவெளியில் உள்ள ஸ்ரீராஜலட்சுமி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், ‘தற்போதுவரை வாக்குபதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது மதியம் 2 மணிக்கு மேல் திமுக தனது ஆட்டத்தை கட்டவிழ்க்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வாக்குப்பதிவு முடியும் வரை அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.’ என கூறினார்.
மேலும் படிக்க | நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி: ஜெயக்குமார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR