10, 11ஆம் வகுப்பில் தோல்வியா... கவலையே வேண்டாம் - துணை தேர்வு அட்டவணை அறிவிப்பு!

10th, 12th Supplementary Exam: 10, 11ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கான துணை தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 19, 2023, 03:18 PM IST
  • ஜூன் 27இல் தொடங்கும் 10ஆம் வகுப்பு துணை தேர்வுகள் ஜூலை 7 வரை நடைபெறுகிறது.
  • 10ஆம் வகுப்பிற்கு மட்டுமே துணை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
  • 11ஆம் வகுப்பு துணை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படவில்லை.
10, 11ஆம் வகுப்பில் தோல்வியா... கவலையே வேண்டாம் - துணை தேர்வு அட்டவணை அறிவிப்பு! title=

10th, 12th Supplementary Exam June 2023: தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவ, மாணவியர் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. கடந்த ஏப். 6ஆம் தேதி தொடங்கி ஏப். 20ஆம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெற்றன. 

ஆறுதல் அளிக்கும் தேர்ச்சி

10ஆம் வகுப்பில் கடந்தாண்டு 90.07 சதவீதமாக தேர்ச்சி விகிதம் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு அது 91.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் கற்றல் குறைபாடு அதிகரித்துள்ளதாக கூறப்படும், இந்த தேர்ச்சி சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

6.50% வித்தியாசம்
 
வழக்கத்தை போல், மாணவர்களை விட மாணவியர்கள் அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவியர் 94.66 சதவீதமும், மாணவர்கள் 88.16 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

தமிழில் சென்ட்டம் இல்லை

தமிழ் பாடத்தில் யாரும் 100க்கு 100 மதிப்பெண்களை பெறவில்லை என்றாலும் ஆங்கில மொழிப்பாடத்தில் 89 பேரும், கணிதத்தில் 3 ஆயிரத்து 649 பேரும், அறிவியலில் 3 ஆயிரத்து 584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் சதம் அடித்துள்ளனர். 

மேலும் படிக்க | Tamil Nadu 10th Result: தேர்ச்சியில் பெரம்பலூர் முதலிடம்... சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுத்துறை இயக்குரகம் தற்போது வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பிற்கான துணைத் தேர்வு வரும் ஜூன் 27ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 4ஆம் தேதி இந்த தேர்வு முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு ஜூன் 27ஆம் தேதி நடத்தப்படுகிறது. ஆங்கில மொழிப்பாடத்திற்கான துணை தேர்வு ஜூன் 28ஆம் தேதியும், கணிதத்திற்கான துணை தேர்வு ஜூன் 30ஆம் தேதியும் நடத்தப்படுகிறது. 

அதேபோல், அறிவியல் பாடத்திற்கும், சமூக அறிவியல் பாடத்திற்குமான துணை தேர்வுகள் முறையே ஜூலை 3, ஜூலை 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, விருப்ப மொழிப்பாடத்திற்கான துணை தேர்வு ஜூலை 1ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 23 ஆயிரத்து 971 பேர் தோல்வியடைந்துள்ளது நினைவுக்கூரத்தக்கது. 

எப்படி விண்ணப்பிப்பது?

தேர்வில்‌ தேர்ச்சி பெறத்‌ தவறிய 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வும் வரும் ஜூன் 27ஆம் தேதி முதல்‌ நடைபெறவுள்ளது. 10, 11ஆம் வகுப்பில் துணை தேர்வை எழுத விரும்பும் பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளியின்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ சேவை மையங்கள்‌ (Government Examinations Service centres) வாயிலாகவும்‌ மே 23ஆம் தேதி பிற்பகல்‌ 12.00 மணி முதல்‌ மே 27ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள்‌ விண்ணப்பிக்க.
வேண்டும்‌. 

இந்நாட்களில்‌ விண்ணப்பிக்கத்தவறும்‌ தேர்வர்கள்‌ சிறப்பு அனுமதித்‌ திட்டத்தில்‌ உரிய கட்டணத்‌ தொகையுடன்‌ மே 30, 31 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம். இதில், 10ஆம் வகுப்பு தேர்வுக்கு 500 ரூபாயும், 11ஆம் வகுப்பு தேர்வுக்கு 1000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 10ஆம் வகுப்பு பாஸ் ஆகியிருந்தாலே அரசு வேலை... மாதம் ரூ. 81 ஆயிரம் வரை சம்பளம் - முழு தகவல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News