திமுக ஆட்சியில் 'துப்பாக்கி' கலாச்சாரம் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய அதிமுக

திமுக ஆட்சியில் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 5, 2022, 01:44 PM IST
  • ஆளுநர் உரையை புறக்கணித்தது அதிமுக
  • திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு
  • தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக புகார்
திமுக ஆட்சியில் 'துப்பாக்கி' கலாச்சாரம் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய அதிமுக title=

2022-ம் ஆண்டின் தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது, அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது, அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம், முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

 

ALSO READ | தமிழகம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தெற்காசியாவுக்கே முன்மாதிரி: ஆளுநர் புகழாரம்

"பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பு இல்லை. கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் தொடர்ந்து வெளிமாநிலங்களிருந்து கடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருட்களின் புழக்கம் உள்ளது. தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. பொங்கல் பரிசு தொகையைக் கூட மக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை" என அவர் சரமாரியாக குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், " வடகிழக்கு பருவமழையில் பல வீதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு திமுக அரசே காரணம்.உணவு மற்றும் பால் கிடைக்காமல் மக்களும், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகளை திமுக அரசு செய்யவில்லை. 2015 -ல் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டபோது கூட அப்போதைய அதிமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கியது. ஆனால், திமுக அரசு விவசாயிகள் உள்ளிட்ட யாருக்கும் எந்த நிவாரணத் தொகையும் வழங்கவில்லை. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு அம்மா மினி கிளினிக்குகளை மூடுகிறது" என்றார்.

மேலும், விசாரணை என்ற பெயரில் அதிமுகவினர் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், திமுக அரசின் கைப்பாவையாக தமிழக காவல்துறை செயல்படுவதாக குற்றம்சாட்டினார். நகைக்கடன் தள்ளுபடி என ஏழை மக்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

ALSO READ | தமிழகத்தில் மீண்டும் மினி லாக்டவுன்? புதன்கிழமை அறிவிப்பா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News