2019 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு - 2 தமிழக வீரர்களுக்கு இடம்

இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியை அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 15, 2019, 04:56 PM IST
2019 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு - 2 தமிழக வீரர்களுக்கு இடம் title=

15:47 15-04-2019
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் என இரண்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


15:38 15-04-2019
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி விவரம்: கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), சிகர் தவான், கே.எஸ்.ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சமி, ஜடேஜா, சாஹால் மற்றும் புவனேஷ்குமார்.

 


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு(2019) வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14, 2019 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. 

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்கின்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்துள்ளது.

தற்போது உலக கோப்பை தொடருக்கான அணிகளை அந்தந்த நாடுகள் அறிவித்து வருகிறது. இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியை அறிவித்து வருகிறது.

Trending News