டோனி எனக்கு தந்தை மாதிரி- முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2013-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தார். இதுவரை 22 டெஸ்டில் விளையாடி 76 விக்கெட்டுகளும், 47 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ள முகமது ஷமி, உத்தரபிரதேசத்தில் பிறந்து, பெங்கால் அணிக்காக விளையாடி வருபவர். 

Last Updated : Dec 26, 2016, 11:37 AM IST
டோனி எனக்கு தந்தை மாதிரி- முகமது ஷமி title=

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2013-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தார். இதுவரை 22 டெஸ்டில் விளையாடி 76 விக்கெட்டுகளும், 47 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ள முகமது ஷமி, உத்தரபிரதேசத்தில் பிறந்து, பெங்கால் அணிக்காக விளையாடி வருபவர். 

இந்திய அணியில் யார் அறிமுகம் ஆனாலும் ஓய்வறைக்கு வரும் போது வீரர்கள் முன்பு பேச வேண்டும். என்னை பேசச்சொன்ன போது பதற்றமடைந்தேன். நமது அணியில் பெரும்பாலான வீரர்கள் வெளிப்படையானவர்கள். அனால் நான் அப்படி இல்லை. எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, இந்தியில் பேசுகிறேன் என்று கூறி விட்டு சில வார்த்தைகளை பேசினேன்.

மேலும் கேப்டன் டோனி பற்றி கேட்டால் அவர் எனக்கு தந்தை மாதிரி. தந்தை-மகன் உறவு போன்றது எங்கள் இடையிலான உறவு.

இவ்வாறு ஷமி கூறியுள்ளார்.

Trending News