ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் தொடங்க மூன்று வாரங்களே உள்ள நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் ஆஸ்திரேலியாவின் டிம் பெயின். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சக பெண் ஊழியருக்கு பாலியல் குறுஞ்செய்திகள் அனுப்பியதற்காக தற்போது ராஜினாமா செய்துள்ளார். 2017-ம் ஆண்டு டிம் பெயின் தனக்கு பாலியல் தொல்லை குடுக்கும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய பெண் ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். அதனை விசாரித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் டாஸ்மானிய கிரிக்கெட் அமைப்பு அப்போது அதில் முகாந்திரம் இல்லை என்று முடித்து வைத்தனர். ஆனால் தற்போது டிம் பெயின் அனுப்பிய குறுஞ்செய்திகள் பொது வெளியில் வெளிவந்துள்ளதால் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ALSO READ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அழைப்பு வந்தது - ரிக்கி பாண்டிங்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான எனது முடிவை இன்று அறிவிக்கிறேன். இது நம்பமுடியாத கடினமான முடிவு, ஆனால் எனக்கும், எனது குடும்பத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் சரியான முடிவு என நம்புகிறேன். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் சக ஊழியருடன் குறுஞ்செய்திகள் அனுப்பினேன். அப்போது இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது விதிமீறல்கள் நடைபெறவில்லை என கண்டறியப்பட்டது. எனினும் அந்த சம்பவத்திற்கு நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தேன், இன்றும் தெரிவித்து கொண்டிருக்கிறேன். இது குறித்து நான் என் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மன்னிப்பு கூறினேன். அவர்களும் எனக்கு ஆதரவாக நின்றனர். இந்த சம்பவம் முடிந்து விட்டதாக நினைத்தேன். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் அணிக்கு பக்கபலமாக இருந்ததாக நினைத்தேன்.
இருப்பினும், இந்த தனிப்பட்ட குறுஞ்செய்திகள் பொதுவில் வரப்போகிறது என்பதை நான் சமீபத்தில் அறிந்தேன். இதனால், நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன், ஆஷஸ் தொடருக்கு முன்னால் அணிக்கு எந்த ஒரு பாதிப்பையும் தர நான் விரும்பவில்லை. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வழிநடத்தியது எனக்கு மிகப்பெரிய பாக்கியம். வீரர்களிடம் நான் அவர்களது புரிதலையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்திற்கும் நான் ஏற்படுத்திய ஏமாற்றத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஒரு வீரராக விளையாடுவேன். மேலும் ஆஷஸ் தொடரை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறேன்.
Tim Paine explains why he's stepping down as Australian Test captain. pic.twitter.com/0tLFhmmKie
— 7Cricket (@7Cricket) November 19, 2021
வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவின் தற்போதைய துணைக் கேப்டனாக உள்ளார். டிம் பெயின் ஓய்வு பெற்றதை தொடர்ந்து பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் 47வது கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார்.
ALSO READ 2025-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR