TNPL கிரிக்கெட் 2021: நெல்லையை வென்றது திருப்பூர்

திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 27, 2021, 07:07 AM IST
TNPL கிரிக்கெட்  2021: நெல்லையை வென்றது திருப்பூர் title=

Nellai Royal Kings vs IDream Tiruppur Tamizhans; தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் (TNPL 2021) திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

ALSO READ | TNPL 2021: கோவை vs திண்டுக்கல்; 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் வெற்றி

அதன்படி முதலில் பேட் செய்த நெல்லை அணி 19.5 ஓவரில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சூர்யபிரகாஷ் 43 ரன்னும், அர்ஜுன் மூர்த்தி 35 ரன்னும் எடுத்தனர். மேலும் திருப்பூர் அணி சார்பில் ராஜ்குமார், மொகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேடிங்க செய்த சித்தார்த் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மான் பாப்னா நிதானமாக விளையாடி அரை சதமடித்தார். இறுதியில், திருப்பூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மான் பாப்னா 51 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ALSO READ | TNPL 2021: நெல்லை vs திருச்சி; முதல் வெற்றியை பதிவு செய்தது திருச்சி அணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News