விராட் பெயரை பின்னுக்கு தள்ளும் முனைப்பில் KL ராகுல்...

புளோரிடாவின் சென்ட்ரல் ப்ரோவர்ட் பிராந்திய பூங்கா மைதானத்தில் இன்று நடைப்பெறும் போட்டியில்., புதிய சாதனை ஒன்றை பதிய காத்திருக்கின்றார் கே.எல் ராகுல்!

Last Updated : Aug 3, 2019, 08:49 PM IST
விராட் பெயரை பின்னுக்கு தள்ளும் முனைப்பில் KL ராகுல்... title=

புளோரிடாவின் சென்ட்ரல் ப்ரோவர்ட் பிராந்திய பூங்கா மைதானத்தில் இன்று நடைப்பெறும் போட்டியில்., புதிய சாதனை ஒன்றை பதிய காத்திருக்கின்றார் கே.எல் ராகுல்!

மேற்கிந்தியா சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இந்த மூன்று தொடர்களுக்கும் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் துணை கேப்டனாகவும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அஜிங்க்யா ரஹானே துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடைப்பெறும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 121 ரன் குவிக்கும் பட்சத்தில் மிக குறுகிய காலத்தில் 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையினை பெருவார். மேலும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களின் பட்டியலில் 7-ஆம் இடம் பிடிப்பார்.

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 24 இன்னிங்ஸ் விளையாடியுள்ள கே.எல் ராகுல் 879 ரன்கள் குவித்துள்ளார். இன்று விளையாடும் போட்டியில் ராகுல் 121 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் 25 இன்னிங்ஸில் 1000 ரன்கள் குவித்த வீரர் என்னும் பெருமையினை பெறுவார்.

இவருக்கு முன்னதாக இப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் (25 இன்னிங்ஸ்) முதல் இடத்திலும், இந்தியாவின் விராட் கோலி (27 இன்னிங்ஸ்) இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

ஒருவேளை இன்றைய போட்டியில் ராகுல் 1000 ரன்களை எட்டா போதிலும், வரும் போட்டிகளில் குவித்தால், இப்பட்டியலில் முதல் மூன்று இடத்திற்குள் இடம் பிடிப்பார்.

20 ஓவர் போட்டிகளில் 100 ரன்கள் குவிப்பது என்பது கடினமான காரியம் என்ற போதிலும், கே.எல் ராகுலுக்கு எளிமையான காரியமாகவே பார்க்கப்படுகிறது. காரணம் முந்தைய போட்டிகளில் 2 சதம் அடித்துள்ள ராகுல் இந்ந எளிய இலக்கினை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்றைய போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிராக ராகுல் ஒரு சதம் அடித்துள்ளார் என்பது, அவரின் மீதான நம்பிக்கையினை மேலும் அதிகரித்துள்ளது.

Trending News