KKR vs DC: முதல் ஓவரில் அடுத்தடுத்து ரிவ்யூ - ரஹானேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

டெல்லிக்கு எதிரான முதல் ஓவரில் இருமுறை ரிவ்யூவில் தப்பிய ரஹானே, உண்மையான அவுட்டில் இருந்து தப்பித்தார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2022, 06:37 PM IST
  • ரஹானேவுக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்
  • முதல் 2 பந்தில் அடுத்தடுத்து டெல்லி அணி அப்பீல்
  • கேட்ச் பந்தில் அப்பீல் செய்யாமல் விட்ட டெல்லி
KKR vs DC: முதல் ஓவரில் அடுத்தடுத்து ரிவ்யூ - ரஹானேவுக்கு அடித்த அதிர்ஷ்டம் title=

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான 19வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 215 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்திவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2022: பிரபல இந்திய வீரருடன் கைக்குலுக்க மறுத்த யுஸ்வேந்திர சாஹல் - வீடியோ வைரல்

பிரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்களும், வார்னர் 45 பந்துகளில் 61 ரன்களும் விளாசினர். 14 பந்துகளை எதிர்கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட், 27 ரன்கள் விளாசினார். இவர்களைத் தொடர்ந்து பின்வரிசையில் இறங்கிய அக்ஷர் படேல் மற்றும் ஷர்துல் தாக்கூரும் அதிரடியான அட்டத்தை விளையாடினர். அக்ஷர் படேல் 14 பந்துகளில் 22 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 11 பந்துகளில் 29 ரன்களும் விளாசினர்.

ஷர்துல் தாக்கூர் மொத்தம் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் டெல்லி அணி கொல்கத்தா அணிக்கு மெகா ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே தடுமாற்றத்தை எதிர்கொண்டது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரஹானேவுக்கு எல்பிடபள்யூ அப்பீல் செய்யப்பட்டது. பந்தை காலில் வாங்கியதால், அம்பயர் அவுட் கொடுத்தார்.

ரிவ்யூவில் அது அவுட் இல்லை என தெரியவந்தது. அடுத்த பந்தும் எல்பிடபள்யூ அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் அது இன்சைட் எட்ஜாக இருந்தது. டெல்லி அணி அப்பீல் செய்தவுடன் அம்பயர் மீண்டும் அவுட் கொடுத்தார். ரஹானே ரிவ்யூ எடுத்ததில், அது இன்சைட் எட்ஜ் என்பது தெளிவாக தெரிந்தது. இதனால் அந்தமுறையும் அவுட்டில் இருந்து தப்பித்தார். ஆனால், 3வது பந்து ரஹானேவின் பேட்டில் பட்டு கீப்பர் பன்டிடம் கேட்சாக தஞ்சமடைந்தது. இதனை கவனிக்காத பன்ட் கேட்ச் அப்பீல் செய்யவில்லை. பவுலரும் அப்பீல் செய்யாததால் 3வது பந்தில் உண்மையான அவுட்டில் இருந்து ரஹானே தப்பித்தார். மூன்று முறை தப்பிய ரஹானே 14 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வெளியேறினார். 

மேலும் படிக்க | சென்னை அணியின் தோல்விக்கான 4 காரணங்கள் இவை தான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News