இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 303 ரன்கள் குவித்துள்ளது!
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
முன்னதாக, கடந்த பிப்., 1 ஆம் நாள் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. பின்னர் பிப்., 4 ஆம் தேதி நடைப்பெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே 6 ஒருநாள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று 3வது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுன் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சினை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார், எனினும் தவான் தன் பங்கிற்கு ரன்களை குவிக்க துவங்கினார். அவருடன் கைகோர்த்த கோலி அதிரடியாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் குவித்தார்.
அவருக்கு துணையாக நின்ற தவான் 76 ரன்களில் வெளியேற, இவரை அடுத்து வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
Virat Kohli (160*) scored yet another hundred, his 34th in ODIs, to help India to 303/6 from their 50 overs. South Africa will require 304 to win the 3rd ODI. https://t.co/xPPIiSdZBe #SAvIND pic.twitter.com/3q4g7UIehc
— ICC (@ICC) February 7, 2018
இந்நிலையில் 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது!