3-வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது
இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 16-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ரென்ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 50 ரன்கள் இருக்கும் போது ஆஸ்திரேலியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதனை தொடர்ந்து கேப்டன் ஸ்மித்(178) மற்றும் மேக்ஸ்வெல்(104) இருவரின் சதத்தால் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு தனது முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் எடுத்தது.
இந்திய சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் ஆட லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் களம் இறங்கினார்கள். இருவரும் பொறுப்புடன் ஆடினார்கள். இந்தியா 91 ரன்கள் இருந்த போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் லோகேஷ் ராகுல்(67) தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் கேட்ச் அவுட் ஆனார். பிறகு வந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை தொடங்கினார்.
இந்தியா 120 ரன்கள் எடுத்த நிலையில் 2வது நாள் ஆட்டம் முடிவுற்றது. முரளி விஜய்(42), புஜாரா(10) களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
#TeamIndia finish Day 2 on 120/1 (Vijay 42*, Pujara 10*), trail Australia (451) by 331 runs #INDvAUS pic.twitter.com/PT5z3wUBTr
— BCCI (@BCCI) March 17, 2017
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.