கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலககோப்பை போட்டி ரணகளமான கட்டத்தை எட்டியிருக்கிறது. ரொனால்டோவும், மெஸ்ஸியும் இறுதிப் போட்டியில் ஆட வேண்டும் என்று நாள்தோறும் கால்பந்து போட்டியை பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஆம், 5 முறை கால்பந்து உலக கோப்பைகளில் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடியிருக்கும் ரொனால்டோ, ஒருமுறை கூட அந்த கோப்பையை உச்சி முகர்ந்தது இல்லை. இம்முறையாவது உச்சி முகர்ந்து மகிழ்ச்சியுடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விடை பெற்றுவிடலாம் என எண்ணியிருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
மேலும் படிக்க | போடா லூசு! லியோனல் மெஸ்ஸியின் ஆக்ரோஷம் வைரல்! அம்பியா? ரெமோவா? ரசிகர்கள் அதிர்ச்சி
மொராக்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி தோல்வியை தழுவி நாக்அவுட் சுற்றுடன் வெளியேறியிருக்கிறது. அப்போது, மைதானத்தில் இருந்த ரொனால்டோ கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். அவரின் இந்த அழுகையை பார்த்து ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களும் இதயம் நொறுங்கிப்போயினர். ஏனென்றால் அடுத்த கால்பந்து உலக கோப்பையில் ரொனால்டோ விளையாடுவது இயலாத ஒன்று என்பதால், பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் ரொனால்டோ அணி தோல்வியை தழுவியதால் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
As I said before, criticize Neymar for his faults... but also praise him for his virtues. pic.twitter.com/gfPJngn7BW
— Juan Arango (@JuanG_Arango) December 10, 2022
இதேபோல், 5 முறை சாம்பியனான பிரேசில் அணியும் காலிறுதி ஆட்டத்தில் குரேஷியாவிடம் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நெய்மர் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதார். 30 வயதாகும் ஆகும் அவர் அடுத்த உலக கோப்பையில் விளையாடலாம் என்றாலும், அதற்கு வாய்ப்பில்லை என்பதுபோல் போட்டிக்குப் பிறகான பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நெய்மர் மைதானத்தில் கண்ணீர்விட்டு அழும்போது குரேஷியா அணியைச் சேர்ந்த வீரரின் மகன், அவரை சமாதானப்படுத்தினார். இந்த காட்சி சக வீரர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ