சச்சினின் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருந்த முன்னாள் வீரருக்கு நேர்ந்த கதி

ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் 15 வயது சிறுவனின் பந்துவீச்சில் அவுட்டானார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 26, 2022, 01:06 PM IST
  • இங்கிலாந்து முன்னாள் கேப்டனின் வீடியோ
  • 15 வயது சிறுவன் பந்துவீச்சில் அவுட்டாகிறார்
  • அலஸ்டர் குக்கிற்கு நேர்ந்த கதி
சச்சினின் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருந்த முன்னாள் வீரருக்கு நேர்ந்த கதி title=

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக இருந்தவர் அலஸ்டர் குக். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், சச்சினின் உலக சாதனையை முறியடிப்பவராகவும் கருதப்பட்டார். சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களை எடுத்துள்ள நிலையில், அந்த ரன்களை இவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தளவுக்கு அச்சுறுத்தலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தார் குக். இப்போது, 15 வயது சிறுவனின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறி இருக்கிறார்.  

அலஸ்டர் குக் ஓய்வு

2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அலெஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 45.35 சராசரியில் 12,472 ரன்கள் எடுத்துள்ள அவர், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனாகவும் இருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 

மேலும் படிக்க | ’ஆர்சிபி..ஆர்சிபி..ஆர்சிபி’ ரசிகர்களின் கோஷத்தால் வென்ற பெங்களுரு

குக் கிளீன் போல்டு

ஒரு போட்டியில் அவர் பேட்டிங் செய்யும்போது, 15 வயது சிறுவனின் பந்துவீச்சில் போல்டாகிறார். அந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. குக்கின் விக்கெட்டை வீழ்த்தியவர் ஸ்கெல்டன். பெட்ஃபோர்ஷயர் யங் ஃபார்மர்ஸ் மற்றும் பொட்டன் டவுன் கிரிக்கெட் கிளப் இடையே நடைபெற்ற போட்டியில், குக் போல்டாகி வெளியேறி இருக்கிறார். மிகப்பெரிய வீரர் ஒருவரின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அந்த சிறுவன் துள்ளிக் குதிக்கிறார்.

சர்வதேச போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, 147 ரன்கள்ங எடுத்தார். அந்தப் போட்டிக்குப் பிறகு திடீரென ஓய்வு முடிவை அறிவித்த குக், கிரிக்கெட் லைம் லைட்டில் இருந்து காணாமல் போனார். இப்போது இந்த வீடியோ மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார். 

மேலும் படிக்க | Watch: ஷிகர் தவானை அடி வெளுத்த அவரின் தந்தை - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News