என்னது சனிப் பெயர்ச்சி டிசம்பர்ல தானா...திருநள்ளாறு கோயில் விளக்கம்

Sani Peyarchi 2023 Thirunallar Temple: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2023 டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி விழா என்று துல்லியமாக திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 17, 2023, 12:00 PM IST
  • 2023 சனிப் பெயர்ச்சி எப்போது?
  • திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாகம் முக்கிய அறிவிப்பு.
  • 2023 டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி விழா.
என்னது சனிப் பெயர்ச்சி டிசம்பர்ல தானா...திருநள்ளாறு கோயில் விளக்கம் title=

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. ஜோதிட ரீதியாக சனி பகவான் ஒரு அசுப கிரகமாக பார்க்கப்பட்டாலும், சனி கெடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்கிற கருத்தும் உண்டு. ஒருவரின் ஜனன கால ஜாதகப்படி அவருக்கு நடக்கும் தசா புத்தி பொறுத்து ஒருவருக்கு சனி பகவானால் சுப பலன்கள் ஏற்படுமா, அல்லது அசுப பலன்கள் அதிகம் ஏற்படுமா என்பது தெரியும். அதேபோல் மொத்தமுள்ள எட்டு கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. சனி அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.

சனிப் பெயர்ச்சி
இந்திய சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர்.
* ஏழரைச் சனி
* மங்கு சனி
* பொங்கு சனி
* தங்கு சனி
* மரணச் சனி

மேலும் படிக்க | Saturn Transit: சனியின் அதிசார சஞ்சாரத்துக்கு முடிவு! மகரத்தில் வக்ரமாகும் சனீஸ்வரர்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர். 

எப்போது சனிப் பெயர்ச்சி 2023?
சனிப் பெயர்ச்சிவிழா தொடர்பாக பக்தர்களிடையே நிலவும் குழப்பத்தைப் போக்கும்வகையில், தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறியதாவது., "வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே அனைத்து பூஜைகளும், விழாக்களும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இக்கோயிலின் மிக முக்கிய விழாவான சனிப் பெயர்ச்சி விழா 2023 டிசம்பர் மாதம் நடைபெறுகிறது என்று விளக்கமாக தெரிவித்துள்ளார்".

துல்லியமான தேதி நேரம் கணிப்பானது சித்திரை மாதம் பஞ்சாங்கம் வெளியிடப்பட்டப் பிறகு ஒரு வார காலத்தில் சனிப் பெயர்ச்சி விழா கணிக்கப்பட்டும். இதன் பிறகு தான் சனிப் பெயர்ச்சி எப்போது என்று அறிவிக்கப்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | செல்வந்தராக்கும் லட்சுமி குபேர பூஜையை எளிமையாக செய்யும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News