அருகம்புல் விநாயகர்: கன நாயகன் கணபதிக்கு உகந்த அருகம்புல் கொண்டு விநாயகர் சதுர்த்தியன்று அர்ச்சனை செய்தால் தீராத வினைகள் தீரும் மாளாத துன்பமெல்லாம் மாண்டுபோகும். விநாயகர் சதுர்த்தி அன்று அறுகம்புல் கொண்டு அர்ச்சிப்பதன் மூலம் அற்புத பலன்களைப் பெறலாம். இரண்டு இரண்டாக அறுகம்புற்களை எடுத்து விநாயகரின் நாமங்களை உச்சரித்துக் கொண்டே அர்ச்சித்தால், அற்புதமான வாழ்வைப் பெறலாம். அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. அதேபோல எங்கும் எப்போதும் விரைவாக வளரும் தன்மை கொண்டது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருப்பதற்கு முழு முதல் கடவுளுக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கலாம்.
மஞ்சளை பிடித்து வைத்தால் போதும் மஞ்சள் பிள்ளையார் தயார். சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள். இப்படிப்பட்ட எளிய கணபதிக்கு, அவரைப் போன்றே எளிய சுலபமான அருகம்புல்லே பிடித்தமானது.
மேலும் படிக்க | முழு முதல் கடவுள் கணபதிக்கு பிடித்த ராசிகள் எவை தெரியுமா?
தன்னுடைய செல்வங்களுக்கு மேலானது அருகம்புல் என்று அந்த குபேரரால் பெருமைப்படுத்தப்பட்ட அருகம்புல் மிகவும் சக்தி வாய்ந்தது. அருகம்புல் எப்படி உருவானது என்று தெரியுமா?
யாஷினி தேவி என்ற தேவ மங்கை விநாயகரை திருமணம் செய்ய நினைத்து தவம் இருந்தார். ஆனால் பிரம்மச்சாரியாக இருக்க விரும்பிய விநாயகர், தன்னை மணம் புரிய விரும்பிய பெண்ணை, அருகம்புல்லாக மாற்றி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என்று வரமளித்தார் என்கிறது புராணம்.
பார்வதியும் சிவனும் தாயம் விளையாடிய போது நடுவராக இருந்த நந்தி சிவனுக்கு ஆதரவாக கூறியதால் கோபம் கொண்ட பார்வதி தேவி, நந்திக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபத்திற்கு விமோசனம் என்ன தெரியுமா?
மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்திக்காக 18 அடியில் தங்கப் பிள்ளையார் சிலை
விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு விருப்பமான பொருளை கொண்டு அர்ச்சிக்க வேண்டும் என்பதே சாப விமோசனமாக சொல்லப்பட்டது. எனவே, விநாயகர் சதுர்த்தியன்று அருகம்புல்லை படைத்து சாப விமோசனம் பெற்றார் நந்தி.
கணபதிக்கு கைப்பிடி அருகம்புல் கொண்டு அர்ச்சித்தால் போதும். அருகம்புல்லுக்கு பிள்ளையார் புல் என்றும் பெயர் உண்டு. வீடுகளில் சாணம் அல்லது மஞ்சளில் அருகம்புல்லை நட்டு வைத்து வணங்குவார்கள்.
கணபதியின் பூஜைக்கு உரிய அருகம்புல்லுக்கு. தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்கள் உண்டு. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
மேலும் படிக்க | தேவருக்கும் பிடித்தமான ராசி
விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ