பாற்கடலை கடைந்த நாளை நினைவுபடுத்தும் மாசி மாத பிரதோஷம்! பக்தியுடன் அனுசரிப்பு!

Pradhosham And Lord Shiva: மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு  கோவில்களில் சிறப்பு வழிபாடு... நந்தி பகவானுக்கும் வழிபாடு... அபிஷேகம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 21, 2024, 11:31 PM IST
  • மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு...
  • நந்தி பகவானுக்கும் பிரதோஷ வழிபாடு...
  • 2024 மஹாசிவராத்திரிக்கு முன்னதாக பிரதோஷ வழிபாடு...
பாற்கடலை கடைந்த நாளை நினைவுபடுத்தும் மாசி மாத பிரதோஷம்! பக்தியுடன் அனுசரிப்பு! title=

பிரதோஷ காலத்தில், சிவபெருமானை முறைப்படி வழிபட்டால், வியாதி, கடன்,.அகால மரணம், வறுமை முதலியன நீங்கி முக்தி கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு. அதிலும் மாசி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு மாசி மாதம் மிகவும் விசேஷமானது. மஹா சிவராத்திரியும் இதே மாசியில் தான் வருகிறது. மாசி மாத பிரதோஷத்தன்று சிவனை வழிபட்டால் மகிழ்ச்சிக்கு குறைவு என்பதே இருக்காது. 

மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, மிக பெரிய கோவில்களான பிரகதீஷ்வரர் ஆலயம், அருணாச்சலேஸ்வரர் ஆலயம் என பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மாசி மாத பிரதோஷ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபடுவது வழக்கம்...

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூதத் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்குசிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து மஹா தீபாராதனை நடைபெற்றது.

மேலும் படிக்க | சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்.... இவர்களுக்கு தோல்வியே கிடையாது: உங்க ராசி என்ன?

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் என பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது, பின்னர் பல்வேறு விதமான வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.

வழக்கமாக சிவாலயங்களில் பிரதோஷ வேளையில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் மூன்று முறை வலம் வருவார். அப்படி வலம் வரும்போது, முதல் சுற்றில் வேத பாரயணம், இரண்டாம் சுற்றில் திருமுறை பாராயணம் என்றும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இசையுடனும் சிவன் வலம் வருவார்.

பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு ஏற்பட காரணம் தெரியுமா?

ஒருமுறை தேவேந்திரன் தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்துகொண்டிருக்கும்போது துர்வாச முனிவர் வந்தார்.  அவர் தேவேந்திரனுக்கு பரிசாக மாலை ஒன்றை கொடுத்து வாழ்த்த, தேவேந்திரன் அந்த மாலையை அலட்சியமாக யானை தலையில் வைத்துவிட்டான். யானையோ மாலையை காலில் போட்டு மிதித்துவிட்டது.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்... மே 1 முதல் பணக்கார யோகம்

கோபத்தில் துள்ளி குதித்த துர்வாசர் , உன் ஆணவத்திற்கு காரணமான செல்வங்களையும் இழக்க கடவாய் என சாபம் இட, தேவேந்திரனின் செல்வங்கள் அழிந்தன. இழந்த செல்வத்தினை மீண்டும் பெற பாற்கடலை கடையும் முடிவு எட்டப்பட்டது.  

மந்திர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிராக்கி,வாசுகியின் தலைப்பகுதியை அசுரர்களும் வால் பகுதியை தேவர்களும் கடைந்தனர். சோதனை போல் மந்திர மலை கடலில் மூழ்க, மஹாவிஷ்ணு கூர்மாவதராம் எடுத்து தாங்கி நிற்க விபரீதமாக ஆலகால விஷம் எழும்பியபோது, தேவர்களை காக்க விஷத்தை உண்டார் சிவன். அகில உலகும் இவருள் இருப்பதால் ஜீவராசிகள் துன்பபடாமல் இருக்க கருணை உள்ளம் கொண்ட அம்பிகை சிவபெருமான் கழுத்தை தடவ விஷம் அங்கேயே நின்றது.

அதன்பிறகு, அனைவரும்  மகிழ்ச்சி அடையும் படி ரிஷபத்தின் கொம்பு களின் நடுவில் நடனம் ஆடினார் சிவ பெருமான். இவ்வாறு அருள் செய்த நேரமே ‘பிரதோஷ வேளை’ எனப்படுகிறது. சிவன் அருள்புரிந்த நேரம் மாலை 4.30 – 6.00 மணிவரை என்பதால் பிரதோஷம் எப்போதும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.   

மேலும் படிக்க | திருமண தடை நீக்கி மாங்கல்ய வரம் தரும் வழிபாடுகள்! வழிபட்டால் கைமேல் மாங்கல்ய பலன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News