குருவின் அருளால் நவம்பர் 24 முதல் இந்த ராசிகளுக்கு எழுச்சி: வெற்றியும், செல்வமும் குவியும்

Jupiter Direct in Pisces: வியாழனின் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், நவம்பர் 24, 2022 முதல், வியாழனின் மாற்றத்திற்கு பிறகு, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும், பல வித நன்மைகள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 20, 2022, 11:04 AM IST
  • மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குருவால் மேஷ ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள்.
  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
  • இதுவரை தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும்.
குருவின் அருளால் நவம்பர் 24 முதல் இந்த ராசிகளுக்கு எழுச்சி: வெற்றியும், செல்வமும் குவியும்  title=

வியாழன் ராசி மாற்றம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, வியாழன் கிரகம் பல வித செல்வங்களையும், அறிவாற்றலையும், மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுக்கும் கிரகமாக கருதப்படுகின்றது. குரு பகவானின் அருள் ஒரு நபர் மீது பட்டால், அவரது அதிர்ஷ்டம் திறக்கும். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். வியாழனின் மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், நவம்பர் 24, 2022 முதல், வியாழனின் மாற்றத்திற்கு பிறகு, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். 

நவம்பர் 24 ஆம் தேதி குரு பகவான் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையிலிருந்து மாறி வக்ர நிவர்த்தி அடைந்து இயல்பான நிலைக்கு திரும்பவுள்ளார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் பல வித நன்மைகளை பெறவுள்ளனர். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தேவகுரு பிருஹஸ்பதியின் நேரடி சஞ்சாரம் மங்களகரமானதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: 

மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குருவால் மேஷ ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ரிஷபம்: 

வியாழனின் நேரடி சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைப் பெற்றுத்தரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பு கிடைக்கும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கலாம். முதலீடு செய்ய இது நல்ல நேரமாக இருக்கும். 

மேலும் படிக்க | Weekly Horoscope (November 21-27): மேஷம் முதல் கன்னி வரையிலான வார பலன்கள்!

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தேவகுரு வியாழனின் பாதை மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு அமையும். காதல் / திருமண மாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். 

கன்னி: 

மீன ராசியில் வியாழன் சஞ்சாரம் செய்வது கன்னி ராசியினருக்கு சாதகமாக அமையும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.

மீனம்: 

மீன ராசியில் சஞ்சரிக்கும் வியாழன் மீன ராசியின் அதிபதியாகவும் இருக்கிறார். ஆகையால், வியாழனின் வக்ர நிவர்த்தியின் மிகப்பெரிய தாக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். வியாழனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மீன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைத் பிரகாசமாக்கும். மீன ராசிக்காரர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்டும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Weekly Horoscope (November 21-27): துலாம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News