இன்னும் என்ன தூக்கம் உனக்கு? முதலாளியை அடித்து எழுப்பும் பூனை!

பூனை ஒன்று சோஃபா மீது அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் அதன் உரிமையாளரை கோபமாக அடித்து எழுப்பும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 5, 2022, 11:01 AM IST
  • ஓனரை அடித்து எழுப்பும் பூனை.
  • பதறிபோய் எழுந்த முதலாளி.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
இன்னும் என்ன தூக்கம் உனக்கு? முதலாளியை அடித்து எழுப்பும் பூனை! title=

ஒரு நாள் நமக்கு எப்படி வேண்டுமானாலும் அமையலாம், சில சமயம் நமக்கு அந்த நாள் உற்சாகத்தை அளிக்கலாம் அல்லது சில சமயம் நமக்கு மிகவும் மோசமான அனுபவத்தை கொடுக்கலாம்.  அந்த நாள் எப்படி அமைந்தாலும் சரி நம்முடைய சோகத்தை உடனடியாக போக்கி மகிழ்ச்சியை தரக்கூடிய மாயாஜாலக்காரர்களாக விலங்குகள் இருக்கின்றது.  விலங்குகள் செய்யும் குறும்புகள், கோமாளித்தனமான செயல்கள், அறிவான செயல்கள் என பல செயல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.  நேரில் விலங்குகளின் இந்த குறும்பு செயல்களை நம்மால் பார்க்க முடியாமல் போய்விட்டாலும் இணையத்தில் விலங்குகளின் செயல்கள் பல நிரம்பி கிடக்கின்றன, அவற்றை கண்டு நாம் மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம்.  

பூனைகள் எவ்வளவு இனிமையான வளர்ப்பு பிராணி என்பது பலருக்கும் தெரியும், ஆனால் அதன் கோபமான மறுபக்கம் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது, தற்போது வைரலாகியுள்ள பூனையின் ஒரு வீடியோவில் பூனை எவ்வளவு கோபமான ஆள் என்பது தெரிகிறது.  இந்த வைரல் வீடியோவானது ட்விட்டரில் கோச்செங் என்கிற கணக்கில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு வீட்டின் அறையில் வைக்கப்பட்டுள்ள சோஃபா மீது அந்த வீட்டின் உரிமையாளர் நன்கு உறங்கிக்கொண்டு இருக்கிறார்.  அவர் எழுந்திரிக்க தாமதமானதால் அவர் வளர்க்கும் பூனை அவரை எழுப்பும் நோக்கில் மிகவும் கோபமாக தனது கைகளால் அவரை வேகமாக அடிக்க தொடங்குகிறது.  பூனையின் ஆடி தாங்கமுடியாமல் அந்த நபர் பதறியடித்துக்கொண்டு எழுந்திரிப்பதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

 

மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 1.6 மில்லியனுக்கும் அதிகமான இணையவாசிகள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.  அதுமட்டுமல்லாது இந்த வீடியோவிற்கு எழுபத்தி மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News