BCAS: சாப்பிடறது ஒரு குத்தமா? ஆனா, விமானம் நிறுத்தும் இடத்தை டைனிங் டேபிளா மாற்றினா?

Indigo Viral Video: விமானத்தை விட்டுக் கீழே இறங்கிய பயணிகள் விமானம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து உண்ட காணொளியின் எதிரொலி, விமான நிலையத்திற்கும் விமான நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2024, 05:49 PM IST
  • விமான நிலையத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?
  • இண்டிகோவுக்கு அபராதம் விதிப்பு
  • பனிமூட்டத்தால் வந்த வம்பு
BCAS: சாப்பிடறது ஒரு குத்தமா? ஆனா, விமானம் நிறுத்தும் இடத்தை டைனிங் டேபிளா மாற்றினா? title=

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்தில் இதுவரை நடந்திராத அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. அதில்,  விமானத்திற்குள் இண்டிகோ விமானத்தின் விமானியை ஒருவர் அறைந்தார் என்றால், டெல்லி விமான நிலையத்தில் உள்ள செக்-இன் கவுண்டர்களைச் சுற்றி நூற்றுக்கணக்கானவர்கள் ஆக்ரோஷமாக நின்று, தங்கள் விமானம் எப்போது புறப்படும் என்று கூச்சலிட்டனர் என்றால், தற்போது, விமானம் நின்றிருக்கும் இடத்தில் மக்கள் குழுவாக அமர்ந்து உணவு உண்பது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

நேற்று பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் பயணிகள் விமானம் நின்றிருக்கும் இடத்திற்கு அருகில் கும்பல் கும்பலாக அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

"... 12 மணி நேரம் தாமதமான விமானத்திற்குப் பிறகு இண்டிகோ கோவா-டெல்லி பயணிகள், இண்டிகோ விமானத்திற்குப் பக்கத்தில் இரவு உணவு சாப்பிடுவதற்காக மும்பைக்கு திருப்பி விடப்பட்டனர்," என்று X சமூக ஊடகத்தில் ஒரு பயனர் வீடியோ பதிவிட்டார்.

மேலும் படிக்க | நீலப் பொருளாதரத்தை கைப்பற்ற முயலும் சீனாவின் சதி! கடன் பொறிக்குள் சிக்கும் மாலத்தீவு!

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, விமானச் சேவை நிறுவனமான இண்டிகோவிற்கு 1.2 கோடி ரூபாய் (S$195,750) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புச் செயலகம் இது தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

விமானம் வானில் பறக்க தாமதமான நிலையில், விமானத்தை விட்டுக் கீழே இறங்கிய பயணிகள் விமானம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து உண்ட காணொளி பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் 30 லட்ச ரூபாயும், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புச் செயலகம் 60 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்தது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி இண்டிகோ நிறுவனத்திற்கும், மும்பை விமான நிலையத்திற்கும் காரணம் கேட்புக் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அபராதத்தை 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டுமென இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மைய காலகட்டத்தில் ஒரு விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுதான் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இரட்டிப்பு வரிவிலக்கு அளிக்கும் NPS... கணக்கை திறக்க எளிய வழிமுறை இதோ..!!

இண்டிகோ கோவா-டெல்லி பயணிகள், 12 மணி நேரம் தாமதமான நிலையில் விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது, இண்டிகோ விமானத்திற்கு அருகில் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் நிலை ஏற்படுத்தற்காக நாங்கள்  வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், தற்போது நடந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக அடர்ந்த மூடுபனி காரணமாக, "எங்கள் முக்கிய டெல்லி விமான நிலையத்தில் இருந்து, விமானங்கள் புறப்பாடு மற்றும் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டது மற்றும் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | வட்டியை வாரி வழங்கும் இந்த சென்ட்ரல் வங்கி.. சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News