நீர்வீழ்ச்சியா? அல்லது வெள்ளியா? சாலையோரம் கொட்டும் எழில் ஆபரணம்...! வீடியோ

சாலையோரம் வானத்தில் இருந்து கொட்டுவதுபோல் ஆர்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் அழகை தொலைவில் இருந்து பார்க்கும்போது இது நீர் வீழ்ச்சியா? அல்லது உருக்கிய வெள்ளியா? எனும் அளவுக்கு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 24, 2023, 04:44 PM IST
நீர்வீழ்ச்சியா? அல்லது வெள்ளியா? சாலையோரம் கொட்டும் எழில் ஆபரணம்...! வீடியோ title=

வானுயர இருக்கும் மலைப் பிரதேசத்தில் இருந்து வீழும் நீர் வீழ்ச்சியை கண்டு ரசிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இயற்கையின் கொடையை ரசிக்கக்கூடிய பாக்கியம் அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. உலகம் முழுவதும் இயற்கையின் கொடையில் உருவாகியிருக்கும் அழகை கண்டு ரசிக்க இந்த ஒரு வாழ்வு பத்தாது என்றாலும், கிடைக்கக்கூடிய வாய்ப்பில் அவற்றில் சிலவற்றை கண்டு ரசிப்பது என்பது ஒருவருக்கு கிடைத்த வரம் என்றேகூட சொல்லலாம். இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான அந்த அழைக் காண்பதற்காகவே பல மைல், கிலோ மீட்டர் தூரங்கள் பயணிப்பவர்கள் ஏராளம். 

மேலும் படிக்க | Video: மறுபிறவி கொடுத்த இளைஞர்... நண்பனாக மாறிய நாரை - பறவையின் பாசப்பிணைப்பு!

தமிழ்நாடு மற்றும் இந்தியா மட்டுமில்லை உலகம் முழுவதுமே பேரழகைக் கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சிகள் அதிகம். அப்படியான பேரழகைக் கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சியின் வீடியோ யூடியூப்பில் வைரலாகியுள்ளது. முதலில் அந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் தோன்றும் ஒரே எண்ணம், நீரா? இல்லை வெள்ளியா? என்பது தான். அந்தளவுக்கு பளிச்சென்றுக்கு இருக்கும் நீர் தொலைவில் இருந்து பார்க்கும்போது சாலைகளின் மீது ஊற்றுவது போல் உள்ளது. ஆனால், அருகாமையில் செல்லும்போது, மலையின் உச்சியில் இருந்து சாலைக்கு அருகாமையில் வீழ்ந்து, பாய்ந்தோடுகிறது நீர்வீழ்ச்சி.

இந்தியாவில் இருந்து வீடியோவைப் பார்ப்பவர்கள், இந்த நீர்வீழ்ச்சி இமயமலையில் இருக்கும் ஒன்றோ என எண்ணத் தோன்றும். ஆனால், இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவில் இல்லை. நார்வே நாட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சி. பனிமலையில் இருந்து வழிந்தோடி வரும் நீர், வானாவிய உயரத்தில் இருந்து பாயந்து கொட்டுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இயற்கையின் அதிசயம், கண்களுக்கு விருந்து என கமெண்ட் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர், நேரடியாக ஒருமுறையாவது இந்த அழகை கண்டு ரசித்துவிட வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் பதிவு செய்துள்ளனர். 

மேலும் படிக்க | Diamond Beach: கோல்ட்ன் பீச் சென்னையில்! வைரம் கொட்டிக்கிடக்கும் கடற்கரை எங்கு? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News