தமிழகத்தில் பெட்ரோல் விலை 91 ரூபாய்க்கு மேலும் டீசல் விலை 85 ரூபாய்க்கு மேலும் அதிகரித்துவிட்ட நிலையில், கரூரில் ஒரு பெட்ரோல் பம்ப் ஒரு லிட்டர் வரையிலான எரிபொருளை இலவசமாக வழங்கி வருகிறது. ஆச்சரியமாக இருந்தாலும் இது உண்மைதான்.
இந்த இலவச சலுகையைப் பெற, ஒன்றிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் திருக்குறளை ஒப்பித்துக் காட்ட வேண்டும். 10 குறள்களை ஒப்பிப்பவர்களுக்கு அரை லிட்டரும் 20 குறள்களை மனப்பாடமாக ஒப்பிப்பவர்களுக்கு ஒரு லிட்டரும் கிடைக்கும்.
திருக்குறளில் (Thirukkural) மொத்தம் 1,330 குறள்கள் உள்ளன. உலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் திருக்குறளில் அடக்கியுள்ளார் திருவள்ளுவர். ஒவ்வொரு குறளிலும் எத்தனையோ தத்துவங்கள் அடங்கிக் கிடக்கின்றன. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் (Tamil Nadu) கரூர் மாவட்டத்தின் நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள வள்ளுவர் ஏஜென்சியில், திருக்குறளின் கற்றலை ஊக்குவிக்கவே இப்படிப்பட்ட சலுகையை அறிவித்ததாகக் கூறுகிறார்கள். குழந்தைகள் திருக்குறளை வளரும் வயதிலேயே படிக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால், அது வழி காட்டும் விளக்காய் அவர்களது வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு துணை புரியும் என்றும், அதன் துணையால் அவர்களும் தங்கள் கொள்கைகளிலும் இலட்சியங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்றும் பெட்ரோல் பம்பில் உள்ள ஒரு குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.
ALSO READ: திருக்குறளை பரப்பும் சர்தார்ஜி: 1330 குறள்களையும் பனை ஓலையில் பொறித்தார்
பம்பிலிருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோவில், குழந்தைகள் இரு சக்கர வாகனங்களில் தங்கள் பெற்றோருடன் வருவதைக் காண முடிகிறது. குழந்தைகள் பின்னர் அவர்கள் ஒப்பிக்கவிருக்கும் குறள் உள்ள காகிதத்தை பெட்ரோல் பம்பில் உள்ள நபரிடம் ஒப்படைத்துவிட்டு, பின்னர் அதை மனப்பாடமாக ஒப்பிக்கிறார்கள். குறளை சரியாக ஒப்பித்து விட்டால், ஒரு புன்னகையுடன் புறப்படுகிறார்கள். இலவச எரிபொருள் கிடைத்ததால் குழந்தைகளின் பெற்றோரும் பெரிய புன்னகையுடன் பெட்ரோல் (Petrol) பம்பிலிருந்து செல்கிறார்கள்.
திருக்குறளை மனப்பாடம் செய்து வெற்றிகரமான ஒப்பிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அவர்களது முகத்திலேயே காணக்கிடைக்கிறது.
ALSO READ: திருவள்ளுவர் தினம்: அனைத்து இளைஞர்களும் திருக்குறளை படிக்க வேண்டும்: PM Modi ட்வீட்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR