நண்பேண்டா! முதலை கூட நட்பு பாராட்டும் ஜெண்டில்மேன் செய்த வேலை! ஷாக்கடிக்கும் வீடியோ

Viral Friends Video: முதலை கடித்தால் தப்பித்துவிடுவோம் என்ற துணிச்சலில் ஒரு மனிதர் செய்யும் சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது. குறும்புக்கு அளவே இல்லையா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2023, 06:46 PM IST
  • குறும்புக்கு அளவே இல்லையா?
  • அலப்பறை செய்யும் துணிச்சல்கார நண்பர்
  • மனிதர் செய்யும் சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது
நண்பேண்டா! முதலை கூட நட்பு பாராட்டும் ஜெண்டில்மேன் செய்த வேலை! ஷாக்கடிக்கும் வீடியோ title=

நீரில் இருந்து வெளியே வந்த முதலையை பாம்பு விழுங்கும் வீடியோவை பார்த்திருக்கலாம். ஆனால், முதலை இருக்கும் நீருக்குள் இறங்கி, அதனுடன் ஜாலியாய் விளையாடும் மனிதரை பார்த்ததுண்டா? முதலையை கிட்டப் பார்த்தாலே மூச்சு நிற்கும் என்ற நிலையில் தான் பலர் இருப்பார்கள் என்றால், சிலர் யாருடன் எல்லாம் நட்பு பாராட்டுகிறார்கள் என்று மலைக்க வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. நமது கைக்குள் உலகை சுருங்கச் செய்துவிட்ட மொபைலுக்குள் நமது உலகமே அடங்கிவிட்டது, அதன் விளைவு இதுபோன்ற வீடியோக்கள் வைரலாகின்றன. 

பாம்புகள் கடித்தால் பயம் இருக்கலாம், ஆனால் முதலை கடித்தால் தப்பித்துவிடுவோம் என்ற துணிச்சலில் ஒரு மனிதர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லையா? என்று பலர் திட்டுகின்றனர். ஆனால், இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை என்று சொல்லிக் கொண்டு ஜாலியாக முதலையுடன் விளையாடும் விந்தை மனிதரின் வீடியோ வித்தியாசமானதாக இருக்கிறது.

மேலும் படிக்க | பாம்புடன் படுத்து தூங்கும் சிறுமி! எழுந்தவுடன் என்னாச்சு தெரியுமா? வைரல் வீடியோ

வைரல் வீடியோவை பார்த்த பின் உங்களுக்கு வேறு எதாவது கேள்விகளும், குழப்பங்களும் எழுகிறதா என்று சொல்லுங்கள்...

 கொடிய விலங்குகளை பார்த்தால் பயம் வரத்தான் செய்யும். ஆனால், முதலைக்கு பசி வந்தால் பத்தும் பறக்காதா என்ன? ஏன்ப்பா இப்படி ரிஸ்க் எடுக்கறே என்றுபலரும் கேட்கின்றனர்.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் முதலை நண்பர் வீடியோவில், நீரில் இருந்து வெளியே வந்த முதலையை நண்பராக்கிய வீடியோ மனதை கொள்ளை  கொள்கிறது என்றாலும், பார்க்கவே பயமாகவும் இருக்கிறது. சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்களில் பல்வேறு விதமான மோதல்களையும், காதல் விளையாட்டுக்களையும் பார்த்திருக்கலாம். 

மேலும் படிக்க | துணிக்கடைக்கு ஷாப்பிங் செய்ய வந்த பாம்பு! அலறியடித்து ஓடிய மக்கள்! வீடியோ வைரல்

தண்ணீரில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த விலங்கு முதலை, ஆனால் தண்ணீருக்குள்ளேயே இறங்கி, அதனுடன் கொஞ்சி விளையாடி நட்பாக்கும் மனிதரின் தைரியம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. அதிர்ச்சி அளிப்பதால் தானே, இந்த வீடியோ வைரல் ஆகிறது? என்று யாராவது கேட்டால் அது உண்மை என்பதால், லட்சக்கணக்கானவர்கள் இந்த விசித்திர நட்பு வீடியோவைப் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவை பார்த்த பயனர்கள் மிகவும் திகைத்து போயுள்ளனர். வைரலாகும் வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் pescadoresdesp_pesca_esportiva• Original audioஎன்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மிரட்டிய மிக்ஜாம் புயலில் மின்னிய மீட்புக்குழு: இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ

இந்த வீடியோ அதிக லைக் மற்றும் கமெண்ட் மற்றும் லைக்குகளை பெற்று வருகிறது. வீடியோவை பார்த்துவிட்டு ஒரு பயனர் பயத்துடன் செய்த கமெண்ட் என்ன தெரியுமா? ஆக்ரோஷமாக மாறினால், இந்த முதலை மனிதனை விழுங்கிவிடுமா? என்பது தான். 

உண்மையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்த கேள்வி எழலாம். இதற்கான  பதில், அந்த வீடியோவில் நாயகனாய் நிற்கும் மனிதரிடம் தான் இருக்கிறது.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News