படிக்க சொன்னா பல்லிய மேல விட்டுடுவேன்: குறும்புக்கார குழந்தையின் வைரல் வீடியோ

Cute Child Viral Video: பல்லியை பிடித்து பந்தா காட்டும் குழந்தையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இளம் கன்று பயமறியாது என்ற கூற்றுக்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2022, 12:56 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
படிக்க சொன்னா பல்லிய மேல விட்டுடுவேன்: குறும்புக்கார குழந்தையின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இந்த வீடியோ ஒரு சிறு குழந்தை பற்றியது. குழந்தை தனது தாயை அச்சுறுத்துவதற்காக வீட்டின் மாடியில் ஒரு பல்லியைப் பிடித்து அவர் அருகே செல்வதை வீடியோவில் காண முடிகின்றது. பல்லியை பார்த்ததும் பெண்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | பாம்பெல்லாம் எனக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி: பாம்பை கொன்று மாஸ் காட்டும் பூனை 

குறும்புக்கார குழந்தை 

பொதுவாக சிறு குழந்தைகள் குறும்பு செய்வதை பார்த்திருப்பீர்கள். எந்த ஒரு குறும்புத்தனமும் செய்யாமல் அமைதியாக இருக்கும் குழந்தைகள் மிகக் குறைவு. பெரும்பாலான குழந்தைகள் எப்போதும் குறும்பு செய்யும் மனநிலையில் இருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களின் குறும்புகள் குடும்ப உறுப்பினர்களுக்கு பல பிரச்ச்னைகளையும் அளிப்பதுண்டு. 

சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோவிலும் இதே போன்ற காட்சி காணப்படுகிறது. வீட்டின் மாடியில் ஒரு குறும்புக்கார குழந்தை செய்யும் செயலை வீடியோவில் காண முடிகின்றது. அந்த குழந்தை வீட்டின் மாடியில் ஒரு பல்லியை பார்க்கிறது. குழந்தை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு வாலை பிடித்து பல்லியை கைகளில் எடுக்கிறது. பல்லியை பிடித்த குழந்தை அங்கு இருக்கும் பெண்கள் பக்கம் பல்லியுடன் ஓடி அவர்களை அச்சுறுத்துகிறது. பல்லியை அவர்கள் மீது போடவும் குழந்தை முயற்சிக்கிறது. 

பல்லியை பிடித்து பந்தா காட்டும் குழந்தையின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

ஆச்சரியப்பட வைத்த குழந்தை 

இந்த வீடியோவில் குழந்தை குறும்பு செய்யும் விதத்தை பார்த்து அனைவருக்கும் வியப்பு ஏற்படுகிறது. இவ்வளவு சிறிய வயதில் சிறுவன் பல்லியைப் பிடிப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வீடியோ  bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

இளம் கன்று பயமறியாது என்ற கூற்றுக்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. 

இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு ஆட்டம் போட்ட இலங்கை ஆட்டோக்காரர் - வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News