மீண்டும் இணையும் விஜய் - அட்லி கூட்டணி; மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய்-ன் 63-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2018, 07:11 PM IST
மீண்டும் இணையும் விஜய் - அட்லி கூட்டணி; மகிழ்ச்சியில் ரசிகர்கள்! title=

நடிகர் விஜய்-ன் 63-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. AGS எண்டர்டெயின்மெட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தில் விஜய் - அட்லி - ARR கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

#Thalapathy63 #OfficialPressRelease Thank you for all your love and supp  #TeamAgs

A post shared by Archana Kalpathi (@archanakalpathi) on

இதுகுறித்து AGS எண்டெர்டெயின்மென்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேப்போல் இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்-னை இயக்கும் புகைப்படம் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

விரைவில் இப்படத்தில் இடம்பெறவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இத்திரைப்படம் வரும் 2019-ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News