படம் பிடிக்க வந்த யூடியூபரின் கேமராவை திருடிய ஆக்டோபஸ்: வைரல் வீடியோ

நீருக்கடியில் படம் பிடிக்க வந்தவரின் கோ-புரோ கேமராவை ஆக்டோபஸ் ஒன்று பிடித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 10, 2023, 10:07 PM IST
  • கேமராவை திருடிய ஆக்டோபஸ்
  • ஸ்கூபா டைவருக்கு நேர்ந்த கொடுமை
  • கேமராவை வாங்குவதற்கு பட்டபாடு
படம் பிடிக்க வந்த யூடியூபரின் கேமராவை திருடிய ஆக்டோபஸ்: வைரல் வீடியோ title=

கோ ப்ரோ கேமராவுடன் குறும்புக்கார ஆக்டோபஸ் எப்படி ஓடுகிறது என்பதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆக்டோபஸின் இந்த குறும்புத் தனம் காண்போரை ரசிக்க வைத்துள்ளது. கடல் உயிரினங்களின் உலகம் மிகவும் ஆச்சரியமானவை. நீருக்கடியில் நாள்தோறும் அதிசயங்கள் மற்றும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இது தொடர்பான பிரம்மிப்பூட்டும் வீடியோகள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் லேட்டஸ்டாக,  ஒரு ஆக்டோபஸ் GoPro கேமராவை திருடி வைத்துக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. 

மேலும் படிக்க | டேய்! நீ ஏண்டா இப்படி பொறுப்பில்லாம இருக்க? அதட்டும் யானை அம்மா

ஒரு ஸ்கூபா டைவர் தனது கேமராவுடன் நீருக்குள் இறங்கி அங்கும் நடக்கும் விஷயங்களை படாக்கிக் கொண்டிருந்தபோதும் ஆக்டோபஸிடம் சிக்கினார். இதனை சற்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. வழக்கம்போல் அவர் படம்பிடித்துக் கொண்டிருக்க ஆக்டோபஸ் மெதுவாக ஸ்கூபா டைவரின் செல்ஃபிஸ்டிக்கைப் பிடித்து கேமராவை உள்ளே இழுத்தது.

இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் நடந்துள்ளது. இங்கு 16 வயது இளம் ஸ்கூபா டைவர் ஒருவர் தனது கேமராவில் சிறிய ஆக்டோபஸை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆக்டோபஸ் அவரின் செல்ஃபிஸ்டிக்கைப் பிடித்து கேமராவை உள்ளே இழுத்தது. இதன் போது அந்த நீர்மூழ்கி வீரரின் தாயும் அங்கு இருந்துள்ளார், அவரும் கேமராவை வாங்க முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் ஆக்டோபஸ் அங்கிருந்து கேமராவை எடுத்து சென்று விட்டது. இறுதியில் அந்த சிறுவனுடைய தாய் ஓடிச்சென்று உதவிக்கு மற்ற ஸ்கூபா டைவர்களை அழைத்து வந்தார்.

கேமராவை மீட்க இரண்டு பேர் அங்கு வந்து அவருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. சிறுவன் தனது கேமராவை கடைசியாகப் பார்த்த இடத்திற்கு ஸ்நோர்கெலர்களை அழைத்துச் சென்றான். அவர்கள் கவனமாகப் பார்த்தபோது, ​​அங்கே அந்த ஆக்டோபஸ் நீருக்கடியில் இருக்கும் நிலத்தில் அமர்ந்திருந்தது, அது கோ ப்ரோவைச் சுற்றி இறுக்கமாகச் சுற்றியிருந்தது. ஆக்டோபஸின் பிடியில் இருந்து கேமராவை விடுவிக்க அவர்கள் போராட வேண்டியிருந்தது.

இறுதியில் அவரது கேமரா மீட்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆக்டோபஸின் செயல்பாடுகள் அனைத்தும் அந்த கேமராவில் பதிவாகியுள்ளது. நான் கேமராவை சுழற்றி, பதிவானதை பார்த்தேன் என்று ஸ்நோர்கெலர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர் கோ ப்ரோ காட்சிகளை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார், அதைப் பார்த்த பிறகு மக்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். 

மேலும் படிக்க | நீ எவ்ளோ கில்லாடியா இருந்தாலும், என்னை பிடிக்க முடியாது மச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News