சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்ற பெயருண்டு. சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க் காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை. மான், காட்டெருமை, வரிக்குதிரை, பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன. அதற்போல் நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை.
மறுபுறம் குள்ள நரி நாய்க் குடும்பத்தில் உள்ள நரி இனத்தில் ஒரு வகை ஆகும். இவை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. இது அனைத்துண்ணி வகையான விலங்கு. பிற விலங்குகள் தின்னாமல் விட்டுச் சென்றவற்றையும் இவை தின்னும். இவை சுமார் 60-75 செ.மீ (2-2.5 அடி) நீளம் இருக்கும், உயரம் 1 அடி 2 அங்குலம் இருக்கும். இது நரியை விட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி ( குறுநரி ) என்று பெயர். இவை ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழும்.
மேலும் படிக்க | சினேகாவுக்கு எக்ஸ்பிரசனில் டஃப் கொடுக்கும் சுட்டிக் குழந்தை - வைரல் வீடியோ
இந்த நிலையில் இன்று நாம் குள்ள நரி எப்படி சிங்கத்தை வம்பிழுகிறது என்பதை வீடியோவில் காணலாம், அந்தவகையில் மிகுந்த களைப்புடம் காட்டில் தனியாக சிங்கம் ஒன்று உருங்கிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். அப்போது அங்கு ஒரு குள்ள நரி வாறுவதை நாம் காண முடிகிறது. அச்சமயம் துளியும் பயம் இல்லாமல் அந்த குள்ள நரி சிங்கத்திடம் வீண் வம்பு செய்கிறது, அதாவது அதன் வாலை இழுக்க கடுப்பில் அந்த சிங்கம் உறுமுகிறது.
சிங்கம் மாறும் குள்ள நரியின் வீடியோவை இங்கே காணுங்கள்:
சிங்கம் மாறும் குள்ள நரி தொடர்பான இந்த வீடியோ waowafrica என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகளும் பலவித கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | Viral Video: இது தான் ஃபுல் டாஸா... காட்டு பன்றியை தூக்கி எறிந்த காண்டாமிருகம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ