டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இந்த ஐபிஎல் சீசனில் தனது அணியின் செயல்பாடுகளில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். குவாலிஃபையர் சுற்றில் முதல் போட்டியில் டெல்லி அணி விளையாடுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு எதிரான இன்றைய குவாலிபையர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்றுப்போனால் இந்த சீசனில் அணியின் அனைத்து வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி விழுந்துவிடும்.
டெல்லி கேபிடல்ஸின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கு இந்த விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். இப்போது தான் அணிக்கு உண்மையான சோதனை தொடங்குகிறது என்பதை அவர் அறிவார்.
டெல்லி அணி சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில், சிஎஸ்கேவுக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக பாண்டிங் தனது அணியினருக்கு இடையில் உரையாற்றுவதைக் காணலாம். ஆர்சிபிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டிசி தோல்வியடைந்தபோது, ரிக்கி பாண்டிங் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்தினார். அது, ஐபிஎல் 2021 பிளேஆஃப்களுக்கு தகுதிபெற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவியது.
Also Read | முதல் பிளே ஆப்! வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் என்ன சொன்னார்? "புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெறுவது, இதுவரை நமது அணி செய்யாத ஒன்று. இந்த அறையில் உள்ள அனைவரும் போட்டியில் இதுவரை நாம் பெற்ற வெற்றிக்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கிறோம். இதற்காக, நீங்கள் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டும். இது வரை நாம் அருமையாக ஆடினோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை தான், நமது போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றியை உறுதி செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளேன், அப்போதுதான் உண்மையான கிரிக்கெட் விளையாடப்படும்."
"I'm really keen to make sure that our tournament starts Sunday."@RickyPonting won our hearts all over again with his words after #RCBvDC
P.S Watch till the end for a special Change Room's Man of the Match awardee #YehHaiNayiDilli #IPL2021 pic.twitter.com/n2OGPXAerO
— Delhi Capitals (@DelhiCapitals) October 10, 2021
இளம் வீரர் ஆவேஷ் கானுக்கு, பாண்டிங் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைச் சொன்னார். அவர் ஆர்சிபிக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் கொடுத்தார், இது டிசியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், கான் போட்டிகளில் மிகவும் ஈர்க்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தார் மற்றும் விக்கெட்டுகளின் அடிப்படையில் ஹர்ஷல் பட்டேலுக்கு அடுத்தபடியாக உள்ளார்.
"அவேஷ்! நீங்கள் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தீர்கள். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மட்டுமல்ல, 14 ஆட்டங்களுக்கு மேல் நீங்கள் கலந்துக் கொண்ட போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். இன்றிரவு ஒரு ஓவர் அல்லது இரண்டு பந்துகள் நமது வெற்றியை தீர்மானிக்கும். உங்கள் வேலையில் நீங்கள் செய்யும் பாணியை மாற்ற வேண்டாம். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் நமக்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது, எனக்குத் தெரியும்” என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
Also Read | தமிழ் படங்களுடன் ஒத்துப்போகும் ஐபிஎல் அணிகள்!
குறிப்பாக, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான மோதலில் வெற்றிப் பெறுபவர் ஐபிஎல் 2021 இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார், அதே சமயம் தோல்வியடைந்த அணி குவாலிபையர் 2 இல் விளையாடும்.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கேவுக்கு எதிரான இன்றைய போட்டி சுலபமானதாக இருக்காது என்பதைச் சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங், "அவர்கள் ஒரு நல்ல குழுவாகவும், அவர்களை ஒரு உரிமையாளராகவும் நன்றாக மதிக்கிறோம், ஆனால் நாம் அவர்களை எதிர்த்து சிறப்பாக விளையாடமுடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் அவர்களும் சிறந்த அணி என்பதால் நமது வெற்றி மிகவும் கடினமாக இருக்கும்.
இரண்டு கட்டங்களாக வெவ்வேறு நாடுகளில் முதல் முறையாக நடைபெறும் ஐபிஎல் 2021 போட்டிகளில், டெல்லி கேபிடல்ஸ் மூன்றாவது ஆண்டாக போட்டியின் இறுதி நான்கு என்ற தகுதிச்சுற்றுக்குள் இடம்பிடித்துவிட்டது.
தற்போது இறுதிச் சுற்றில் இடம்பெறும் அணிகளின் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. சிஎஸ்கே அணி இரண்டாம் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மூன்றாம் இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்காம் இடத்திலும் உள்ளது.
Also Read | துபாயில் skydiving செய்யும் ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR