சவாரி செய்ய சென்ற நபருக்கு வந்த சோதனை: மாஸ் காட்டிய குதிரை.... வைரல் வீடியோ

Funny Horse Video: இந்த வீடியோவை பார்த்தால், இது இவருக்கு தேவையா என கேட்கத்தோன்றும். ஒரே சமயத்தில் வேடிக்கையையும் பரிதாபத்தையும் வரவழைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 27, 2023, 02:41 PM IST
  • மனிதனை தாக்கிய குதிரை
  • வீடியோ வைரல் ஆனது
  • எட்டி உதைத்த குதிரையின் வீடியோவை இங்கே காணலாம்.
சவாரி செய்ய சென்ற நபருக்கு வந்த சோதனை: மாஸ் காட்டிய குதிரை.... வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போதும் நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகள் பல வகைப்படும். சில விலங்குகள் ஆக்ரோஷமானவை. சில மிகவும் சாதுவானவை. சில மிருகங்கள் பல வழிகளில் மனிதனுக்கு உதவுகின்றன. சில நாம் கண்டு அஞ்சும் வகையில் உள்ளன். இவற்றில் குதிரைகளுக்கு அவற்றுக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. அந்த நாள் முதல் குதிரைகள் பல வழிகளில் மனித இனத்துக்கு உதவி வருகின்றன. இவை மிகவும் சாதுவானவை. ஆனால் இவை அதீத வலிமை பெற்றவை. ஆகையால் இவற்றை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அது நமக்கு நல்லது. இவற்றை சீண்டினால், சாதுவான இந்த விலங்கு எந்த அளவுக்கு ஆக்ரோஷமாக மாறும் என யாராலும் கூற முடியாது.

அப்படி ஆக்ரோஷமாக மாறிய ஒரு குதிரையின் வீடியோவை தான் இந்த பதிவில் காணவுள்ளோம். குதிரையைக் கட்டுப்படுத்துவது அனைவராலும் முடியாது. இதற்காக இந்த பணியில் இருப்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. குதிரையை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது நடக்கும் சில வேடிக்கையான மற்றும் ஆபத்தான சம்பவங்களின் பல வீடியோக்கள் அவ்வப்போடு சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. 

இந்த வீடியோவில் ஒரு நபர் குதிரையை கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. ஆனால், அப்போது குதிரை அந்த நபர் மீது தாக்குதல் நடத்துகின்றது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது, இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | மணல் லிங்கத்துக்கு மாலையாக மாறிய நாகப்பாம்பு: வைரல் வீடியோ

மனிதனை தாக்கிய குதிரை 

வைரலான இந்த வீடியோ 17 வினாடிகள் கொண்டது. அதில் ஒரு மனிதன் குதிரையின் கயிற்றைப் பிடித்துக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதை காண முடிகின்றது. குதிரை தன் கட்டுப்பாட்டில் வராதபோது, ​​அந்த நபர் குதிரையை உதைக்கிறார். அவ்வளவுதான். தன்னை ஒன்றும் செய்யாதவரை குதிரை ஒன்றும் செய்யாது, ஆனால் அதை நாம் சீண்டினால் அதன் தாக்குதலுக்கு தயார் ஆக வேண்டியதுதான். 

குதிரை அந்த நபரை எட்டி உதைத்தது. அந்த நபர் தூரமாக சென்று விழுந்தார். சிவப்பு நிற ஹெல்மெட் அணிந்து அந்த நபர் குதிரை மீது ஏறி சவாரி செய்ய தயாராக வந்திருந்தார். ஆனால், அவரால் அது முடியாதபோது, அவர் அந்த குதிரையை அடித்தார். அதற்கு பதிலாக குதிரையும் அந்த நபரை எட்டி உதத்தது. குதிரை தாக்கியதில் அந்த நபரும் பலத்த காயம் அடைந்ததை வைரலான வீடியோவில் காண முடிகின்றது. 

எட்டி உதைத்த குதிரையின் வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @ViciousVideos என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியுஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. ‘அந்த நபருக்கு இது தேவைதான்’ என இதற்கு ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘நாம் நடந்துகொள்ளும் படி தான் நாம் நடத்தப்படுவோம். அது மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி’ என மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். இப்படி இணையவசிகள் பலர் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | உயிரை பணயம் வைத்து பூனையை காப்பாற்றும் நாய்: நெட்டிசன்களை உலுக்கிப்போட்ட வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News