தில்லிருந்தா வாடா நீயா நானா பாத்துக்கலாம்..ஆட்டுடன் மோதும் சேவல்: வீடியோ வைரல்

Animal Fight Video: ஆடு மற்றும் சேவல் இடையே கடுமையான சண்டை வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதில் சேவல் தன்னை விட பெரிய ஆட்டுடன் சண்டை போடுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 28, 2022, 12:13 PM IST
  • சிறிய சேவல் ஆட்டுடன் மோதியது.
  • பின்னர் என்ன நடந்தது என்பதை வீடியோவில் பாருங்கள்.
  • வைரலாகும் விலங்குகள் சண்டை வீடியோ.
தில்லிருந்தா வாடா நீயா நானா பாத்துக்கலாம்..ஆட்டுடன் மோதும் சேவல்: வீடியோ வைரல் title=

விலங்குகள் சண்டை வீடியோ: பல வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. இதற்கிடையில், ஆடு மற்றும் சிறிய சேவலுக்கு இடையே நடக்கும் பயங்கர சண்டையின் வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதில் சேவல் தன்னை விட பெரிய ஆட்டுடன் சண்டையிடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆட்டை முழு பலத்துடன் தாக்க முயல்கிறது, ஆனால் ஆடு தன் கொம்பினால் பலமாக அடிக்க, அதன் பின் சேவல் அங்கிருந்து ஓடி விடுகிறது. இந்த சண்டைக்கு சமூக வலைதளங்களில் மெஸ்ஸி vs எம்பாப்பே என நெட்டிசன்கள் பெயரிட்டுள்ளனர்.

சேவல் மற்றும் ஆடு இடையே கடுமையான சண்டை
அனிமல்ஸ் பவர்ஸ் என்ற ஹேண்டில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவில் ஆடு மற்றும் கோழிக்கு இடையே நடக்கும் சண்டையை நாம் காணலாம். முன்னால் இருக்கும் கனமான பெரிய ஆடு சேவலை எளிதாக வளைத்துப் பிடிக்கிறது, ஆனால் சேவல் இதைப் பொருட்படுத்தாமல் பின்வாங்காமல் மீண்டும் முழு பலத்துடன் போட்டியிட்டு ஆட்டைத் தாக்க முன்வருகிறது. ஆனால் ஆடு மீண்டும் சேவலை அதன் கொம்பினால் கடுமையாக தாக்கியது, அதன் காரணமாக சேவல் அங்கிருந்து ஓடியதை காணமுடிகிறது.

மேலும் படிக்க | கொஞ்ச விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

சண்டையின் வீடியோவைப் பாருங்கள்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

எம்பாப்பே மற்றும் மெஸ்ஸி இடையே நடந்த சண்டையை ஒப்பிட்ட நெட்டிசன்கள்
இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிய நிலையில், அர்ஜென்டினாவின் உலகப் புகழ்பெற்ற கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு பிரான்ஸ் அணியின் வீரர் கைலியன் எம்பாப்பே கடும் போட்டி கொடுத்தார் என்பது தெரிந்ததே. தொடர்ந்து 3 கோல்களை அடித்தார், ஆனால் இறுதியில் மெஸ்ஸியின் அணி பிரான்சை தோற்கடித்தது.

அதனால்தான் சேவல் (கிலியன் எம்பாப்பே) மற்றும் ஆடு (லியோனல் மெஸ்ஸி) சண்டையை மெஸ்ஸி vs எம்பாப்பே என்று நெட்டிசன்கள் பெயரிட்டுள்ளனர் , ஏனெனில் உலகக் கோப்பையில் எம்பாப்பேவுடன் மெஸ்சி கடுமையாகப் போராடினார், ஆனால் இறுதியில் மெஸ்ஸி வென்றார். அனிமல்ஸ் பவர்ஸ் என்று பெயரிடப்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களால் வெளியிடப்பட்ட வீடியோவை ஆயிரக்கணக்கான மக்கள் லைக் செய்துள்ளனர், அதே நேரத்தில் பல பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | யாருடா இங்க காட்டுக்கு ராஜா - மாஸ் காட்டிய யானைகள்... தெறித்து ஓடும் சிங்கங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News