’எங்களையும் விட மாட்டீங்களா?’ சிறுமியிடம் சிக்கிய குட்டி பூனையின் ரியாக்ஷன்

சிறுமியிடம் சிக்கிய குட்டி பூனையின் ரியாக்ஷன் இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 6, 2022, 08:32 PM IST
’எங்களையும் விட மாட்டீங்களா?’ சிறுமியிடம் சிக்கிய குட்டி பூனையின் ரியாக்ஷன் title=

சின்ன குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வீட்டில் இருக்கும்போது எழுத படிக்க கற்றுக் கொடுப்பார்கள். தினம்தோறும் ஒவ்வொரு விஷயமாக அவர்கள் சொல்லிக் கொடுக்க, நாளடைவில் அவர்கள் ஸ்பெஷலிஸ்டுகளாக இருப்பார்கள். சின்ன விஷயங்களையும் குழந்தைகள் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு பெற்றோர்களும் கனிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அமைதி, கோபம், எச்சரிக்கை உள்ளிட்ட அனைத்து பாவணைகளையும் பெற்றோர்களின் நடவடிக்கைகளிலும், அவர்கள் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களில் இருந்து தெரிந்து கொள்ளும் குழந்தைகள் உடனடியாக தங்களுக்கு கிடைக்கும் சந்தர்பத்தில் பின்பற்றவும் செய்வார்கள்.

மேலும் படிக்க | Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!

உதாரணமாக ஒருவருக்கு நீங்கள் உதவி செய்வதை சொல்லிக் கொடுத்தால், அவர்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உதவி செய்ய தொடங்குவார்கள். மடியில் அமர வைத்து எழுத படிக்க கற்றுக் கொடுக்குறீர்கள் என்றால், அவர்களும் அமைதியாக உட்கார்ந்து கற்றுக் கொள்வார்கள். அப்படி எழுத படிக்க ஒரு பெற்றோர் கற்றுக் கொடுத்ததை குழந்தை ஒன்று, தங்கள் வீட்டின் பூனைக்கு எழுத கற்றுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

குழந்தைக்கு அது பூனை, அதற்கெல்லாம் எழுத படிக்க தெரியாது என்பது அறிந்து கொள்ளும் சக்தி குறைவு. இருந்தாலும், அதனுடன் சக தோழன் போல் பழகி எழுத கற்றுக் கொடுக்கும் வீடியோ காண்போரை ரசிக்க வைக்கிறது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அந்த பூனை குழந்தையை பார்த்து முறைத்தவாறு கொடுக்கும் ரியாக்ஷன் தான் ஹைலைட். டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | சுய இன்பம் வேண்டாமே...! 3 மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த இளைஞரின் வாக்குமூலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News