‘சின்னபுள்ளதனமால்ல இருக்கு’: மணமக்கள் செய்த வேலை, ரசிக்கும் நெட்டிசன்கள், வீடியோ வைரல்

Funny Wedding Video: மணமேடையில் மணமக்களின் கியூட்டான செய்கை!! ரசித்து பார்த்த விருந்தினர்களின் வைரல் வீடியோ.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 16, 2022, 04:45 PM IST
  • இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம்.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
  • இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன.
‘சின்னபுள்ளதனமால்ல இருக்கு’: மணமக்கள் செய்த வேலை, ரசிக்கும் நெட்டிசன்கள், வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாம் செல்லும் பல திருமணங்களில் நாம் காணும் பல விஷயங்கள் எப்போதும் நமது மனதில் நின்றுவிடுகின்றன. 

குறிப்பாக மணமகன் மற்றும் மணமகளின் சில வித்தியாசமான பாணிகளும் செயல்களும் நம் நினைவில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. தங்கள் திருமணம் மிகச்சிறந்ததாக அமைய வேண்டும் என்பதற்காக மணமக்கள் பல வித ஏற்பாடுகளை செய்கின்றனர். எனினும், திருமண நாளில் ஏதாவது ஒரு கலாட்டா, கேளிக்கை நடக்கத்தான் செய்கிறது.

தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் ஒரு திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. மாலை மாற்றும் சடங்கிற்காக மணமக்கள் மேடைக்கு வந்து தயாராக இருப்பதை காண முடிகின்றது. ஆனால் ஒருவருக்கு ஒருவர் மாலை அணிவிக்கும் முன்னர் அவர்கள் செய்யும் கியூட்டான விஷயம் அனைவரது மனதையும் கொள்ளை கொள்கிறது. 

மேலும் படிக்க | மணமகனை பளார் என அடித்த மணமகள்: ஷாக் ஆன நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

மணமகன் மற்றும் மணமகளின் வித்தியாசமான கியூட் பாணி

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மேடைக்கு வருவதைக் காண முடிகின்றது. மணமகள் முதலில் மணமகனுக்கு மாலை அணிவிக்க முயற்சிக்கிறார்.  ஆனால், அதற்கு மணமகன் இசைந்துகொடுக்கவில்லை. பின்னர் யார் முதலில் மணமாலையை அணிவிப்பது என போட்டி வருகிறது.

அப்போது, இருவரும் சேர்ந்து கியூட்டான ஒரு முடிவுக்கு வருகிறார்கள். ‘ஸ்டோன், பேப்பர், சிசர்’ விளையாடி யார் முதலில் மாலை போடலாம் என முடிவெடுக்க தயார் ஆகிறார்கள். அதேபோல் விளையாடத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்த உறவினர்களும் விருந்தினர்களும் மணமக்களின் கியூட் செயலை பார்த்து ரசிக்கிறார்கள். 

மணமக்களின் கியூட் வேலையை இங்கே காணலாம்:

மணமக்களின் காதல் பாணி வைரலானது

மணமக்களின் இந்த ரொமாண்டிக் ஸ்டைல் ​​சமூக வலைதளங்களில் வெளியான உடனேயே வைரலாகி விட்டது. இந்த திருமணம் தொடர்பான வீடியோ, weddingwireindia என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘இது மிகவும் கியூட்டாக உள்ளது’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘மிகவும் அழகிய ஜோடி’ என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோவுக்கு பல வித லைக்குகளும் லட்சக்கணக்கான வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இந்த ஜோடியின் காதல், விளையாட்டுத்தனம், அன்பு ஆகியவற்றை ரசித்து பார்த்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | பூனையிடம் சிக்கிய பறவையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News