சுய காதலை கற்றுக்கொடுக்கும் 7 புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..

Must Read Fictional Books About Self Love :  நம் அனைவருக்குமே சுய காதல் என்பது மிகவும் முக்கியம். அதை சில கதை புத்தகங்கள் கற்றுக்கொடுக்கும். அவை என்னென்ன தெரியுமா?

Must Read Fictional Books About Self Love : புத்தகங்கள் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு கடத்திச்செல்ல உதவும். அதிலும் கதைப்புத்தகங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த புத்தகங்கள், நமக்கு புதிதான விஷயங்களை கற்றுக்கொடுக்கும், நம்மை நாமே காதலிக்கவும் கற்றுக்கொடுக்கும். அப்படிப்பட்ட சில புத்தகங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

1 /7

The Midnight Library: ஒரு நூலகத்தில், வாழ்க்கையை வாழ்வதற்கான பல வழிகள் கிடைத்தால் எப்படி இருக்கும்? என்பதை காட்டுகிறது இந்த புத்தகம். இதனை மேட் ஹைக் எழுதியிருக்கிறார். 

2 /7

Big Magic புத்தகத்தை எலிசபத் கில்பர்ட் என்பவர் எழுதியிருக்கிறார். இது, நம் படைப்பாற்றலை தூண்டச்செய்யும் புத்தகங்களுள் ஒன்று. தன்னம்பிக்கையை வளர்க்க, சுய காதலை அதிகரிக்க கற்றுக்கொடுக்கும் புத்தகம் இது. 

3 /7

Wild புத்தகத்தை, Cheryl Strayed என்பவர் எழுதியிருக்கிறார். இது, இவர் வாழ்வில் நடந்த விஷயங்களை வைத்து எழுதப்பட்ட புத்தகம் ஆகும். மன உறுதி, நம்பிக்கையை வளர்க்கும் வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

4 /7

You Are A Badass புத்தகத்தை ஜென் சின்செரோ என்பவர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், எல்லையற்ற அன்பை பிறர் மீது காட்டுவதற்கு முன்பு, நம் மீது நாம் காட்டிக்கொள்வது எப்படி என்பதை எடுத்துரைக்கிறது. 

5 /7

The Perks Of Being A Wallflower புத்தகத்த ஸ்டீஃபன் சோபோஸ்கி எழுதியிருக்கிறார். தன்னையும், தன்னை சார்ந்த உறவுகளையும் அறிந்து கொள்வது எப்படி என்பதை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது. 

6 /7

The House In The Cerulean Sea புத்தகம், எதிர்பாராத நபர்கள் நம் வாழ்வில் எப்படி எதிராராத மாற்றங்களையும், சுய காதலையும் கற்றுக்கொடுத்துவிட்டு செல்கின்றனர் என்பதை காட்டுகிறது. 

7 /7

Eleanor Oliphant Is Completely Fine புத்தகத்தை கெய்ல் ஹனிமேன் எழுதியிருக்கிறார். தனிமையில் வாழும் ஒருவர், எப்படி தன் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கிறார் என்பதை கற்றுக்கொடுக்கும் புத்தகம் இது.