Homo bodoensis: மனித மூதாதையரின் புதிய இனங்கள் கண்டுபிடிப்பு! அசத்தும் விஞ்ஞானிகள்

'ஹோமோ போடோயென்சிஸ்' எனப்படும் மனித மூதாதையர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இனம், 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உலகில் இருந்ததாம்!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 29, 2021, 05:43 PM IST
  • மனித மூதாதையர் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது
  • ஹோமோ போடோயென்சிஸ் மனிதர்களின் மூதாதையர்
  • 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனம்
Homo bodoensis: மனித மூதாதையரின் புதிய இனங்கள் கண்டுபிடிப்பு! அசத்தும் விஞ்ஞானிகள்    title=

சுமார் அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'ஹோமோ போடோயென்சிஸ்' எனப்படும் மனித மூதாதையர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வின்னிபெக் பல்கலைக்கழகம் மற்றும் பெல்கிரேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

"இந்த காலகட்டத்தில் மனித பரிணாமத்தைப் பற்றி பேசுவது மனித புவியியல் மாறுபாட்டை அங்கீகரிக்கும் உரிய தரவுகள் இல்லாததால் சாத்தியமற்றது" என்று இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் Mirjana Roksandic கூறுகிறார்.

ஆப்பிரிக்காவில் மத்திய ப்ளீஸ்டோசீன் (Middle Pleistocene) காலத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ போடோயென்சிஸ் (Homo bodoensis). அவர்களை தற்போது சிபானியன் (Chibanian) என்றும் குறிப்பிடுகின்றனர்.
 
'போடோயென்சிஸ்' (bodoensis) என்ற சொல் எத்தியோப்பியாவின் Bodo D'ar பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓட்டில் இருந்து பெறப்பட்டது. நமது சொந்த இனங்களான ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) மற்றும் ஐரோப்பாவில் நமது நெருங்கிய உறவினர்களான நியாண்டர்டால்-களின் (Neanderthals) வளர்ச்சியையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Also Read | Neanderthals: மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்

''தகவல்தொடர்புக்கு வசதியாக, அறிவியலில் விதிமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும். அவை புதைபடிவ பதிவுக்கு முரணாக இருக்கும்போது அவை முழுமையானதாக கருதப்படக்கூடாது,'' என்கிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரியர் ப்ரெட்ராக் ராடோவிக் (Predrag Radovic).

"ஒரு புதிய இனத்திற்கு பெயரிடுவது ஒரு பெரிய விஷயம், ஏனெனில் விலங்கியல் பெயரிடலுக்கான சர்வதேச ஆணையம் மிகவும் கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட விதிகளின் கீழ் மட்டுமே பெயர் மாற்றங்களை அனுமதிக்கிறது," என்று ரோக்சாண்டிக் (Roksandic) கூறுகிறார்.

"இது நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மற்ற ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்தினால் மட்டுமே இது நிலைக்கும்"

Also Read | மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News