சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் தீரன் பட ஹீரோயின்!

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங் தேர்வாகியுள்ளார்!

Last Updated : Mar 24, 2018, 12:23 PM IST
சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் தீரன் பட ஹீரோயின்! title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான `வேலைக்காரன்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். 

இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாக திரைப்படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது திரையரங்குகள் வேலை நிருத்தனம் நடந்து வருகின்ற நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வருகின்றனர். வேலைகாரம் படத்தை தயாரித்த 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்த படத்தையும் தயாரிக்கிறார். 

படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் இடம் பெறும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Trending News