சென்னை: உலகத் தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கும் “அயலகத் தமிழர் தினம்" நிகழ்ச்சிகள் சென்னையில் தொடங்கின. அயலகத் தமிழர்களுக்கான திருநாளைக் கொண்டாடும் தமிழக அரசு இரு நாட்களுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இரண்டாம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர். ஜனவரி 11, 12 என இரு நாட்கள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த அயலகத் தமிழர் தினத்தின் முதல் நாளான இன்று, காலை 09:30மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின.
தமிழக எல்லையைத் தாண்டி, பரந்துபட்டு சர்வதேசங்களிலும் வசிக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் தமிழக அரசு அயலக தமிழர் தினத்தை கொண்டாடிவருகிறது. கடந்த ஆண்டு முதல், ஜனவரி 12ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக தமிழ்நாடு அரசால் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும் என்பதன் அடிப்படையில், இந்த ஆண்டும், தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அயலகத் தமிழர் நலத்துறையின் செயல்பாடுகள்
முதல் நாளான இன்று, அயலகத் தமிழர் நலத்துறையின் செயல்பாடுகள் - காட்சி வடிவத்தில் காட்டப்பட்டன. உலகெங்கும் தமிழர் இடம்பெயர்வு மற்றும், தமிழ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் மற்றும் தமிழ்மொழி கற்பித்தல், அயலகத் தமிழர்கள் வரலாறு தொடர்பான விஷயங்கள் அலசப்பட்டன.
அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள்
அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் தமிழ் சங்கங்களின் பங்களிப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொழில்துறையில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு
தொழில் துறையில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு மற்றும் தமிழ்நாட்டில் அவர்களின் முதலீடுகள், அயலகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அயல்நாடுகளில் தமிழர்களின் தொழில் முன்னெடுப்புகள் தொடர்பான நிகழ்ச்சிகள் மதியம் நடைபெறும்.
உயர்கல்வி
அயலக மாணவர்கள் தமிழ்நாட்டில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள மற்றும், அயலக பல்கலைக்கழகங்களுடன் மாணவர்கள் பரிமாற்றம்தொடர்பான நிகழ்ச்சிகளும் இன்று மதியம் நடைபெறும்.
இரண்டாம் ஆண்டு அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு, பேச்சுப் போட்டி, திருக்குறள் வினாடி-வினா, பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளில் ஆன்லைனில் கலந்து கொள்ள தமிழக அரசு ஏற்பாடுகளை செய்திருந்தது.
உள்ளுர் மற்றும் அயலக உலகத்தமிழர்களிடையே இணைப்புகளை ஏற்படுத்துவது, அயலக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்கும் வகையில் நிகழ்ச்சிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அயலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, இரண்டு நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டுப்புறப் பாடல், செவ்வியல் மற்றும் திரைப்பட பாடல்கள் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல் என தமிழக அரசு பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
மேலும் படிக்க | திருவையாற்றில் 176வது தியாகராஜ ஆராதனை திருவிழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ