Mullivaikkal: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 14ம் ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது

14th Remembrance Day Of Mullivaikkal:  இலங்கை முள்ளிவாய்க்காலில் போரில் உயிரிழந்தவர்களுக்கு 14ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2023, 03:04 PM IST
  • 14ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
  • இலங்கையில் நடந்த உச்சகட்ட போர்
  • ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை
Mullivaikkal: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 14ம் ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது title=

யாழ்ப்பாணம்: இலங்கை முள்ளிவாய்க்காலில் போரில் உயிரிழந்தவர்களுக்கு 14ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கபட்டது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைபுலிகளுக்கு எதிராக இறுதிகட்டபோர் நடந்தது.அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கை பாதுகாப்பு துறை செயலாளராக இருந்தார். இந்த போரின்போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18-ந்தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை தமிழ் அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும் இனப்படுகொலை நினைவு தினமாகவும் அனுசரித்து வருகின்றனர். 

இலங்கையில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்களும், முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.அது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றில் சில இவை...

அதன்படி இந்த ஆண்டு இன்று (18-ந்தேதி) 14வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கபட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் வந்திருந்த ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

2009 இல் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையை சிங்கள அரசு மேற்கொண்டது. குழந்தைகள் குறிவைத்து அழிக்கப்பட்டனர். சர்வதேச சமூகத்தையே நிலை குலையச் செய்த முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுப்படுத்தப்பட்டது. 

கடந்த காலங்களில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் தான் நடக்கும். அதோடு, இதற்கு அரசு தரப்பில் கட்டுபாடுகளும் தடைகளும் போடப்படும். 

இந்த ஆண்டு, இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை தமிழர்கள் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார்கள். மே 18ம் தேதியான இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க - Karnataka Election Results 2023: எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெற்றது - முழு பட்டியல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News