இந்த முதலிரவு காட்சி வித்தியாசமாக இருக்கும் - விஷ்ணு விஷால்!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகும் 'கட்டா குஸ்தி' படம் குறித்து படக்குழுவினர் சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 21, 2022, 09:00 PM IST
  • கட்டா குஸ்தி படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால்.
  • தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகி வருகிறது.
  • இந்த படத்தை 22 நாட்களில் நடத்தி முடிக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த முதலிரவு காட்சி வித்தியாசமாக இருக்கும் - விஷ்ணு விஷால்! title=

வெண்ணிலா கபடி குழு மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் பல சிறப்பான படங்களில் நடித்துள்ளார்.  இவர் தற்போது விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் காமெடி கலந்த குடும்ப கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.  தெலுங்கு திரையுலகின் பிரபலமான  தேஜாவுடன் இணைந்து விஷ்ணு இந்த படத்தை தயாரிக்கிறார்.  இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தமிழில் 'கட்டா குஸ்தி' என்றும் தெலுங்கில் 'மட்டி குஸ்தி' என்றும் பெயரிடப்பட்டு இருக்கிறது.  செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

vishnuvishala

மேலும் படிக்க | அருள்நிதி நடித்த தேஜாவு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

கடந்த ஏப்ரல் மாதத்தில் படத்திற்கான தயாரிப்பு பணிகளை தொடங்கிய படக்குழு, தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.  அம்பாசமுத்திரம், தென்காசி, சென்னை, ஆலப்புழா, பாலக்காடு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது, இந்த படத்தை 22 நாட்களில் நடத்தி முடிக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்,  சமீபத்தில் இப்படத்தின் முதலிரவு காட்சி நடந்த சமயத்தில் படக்குழுவினர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.  முதலிரவு காட்சி குறித்து விஷ்ணு கூறுகையில், இந்த காட்சி மிகவும் நகைச்சுவையானது, எவ்வளவோ முதலிரவு காட்சிகளை நாம் பார்த்திருப்போம் ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது என்று தெரிவித்துள்ளார்.  மேலும் இது என்னுடைய பெரிய திட்டம், படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகர், ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு என பெரிய கலைஞர்கள் இந்த திட்டத்தில் உள்ளனர்.

vishnuvishala

இந்த படத்தில் நான் ஒழுங்கான மல்யுத்த வீரர் இல்லை, அதனால் அதிக காட்சிகளில் நான் சண்டையிட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.  மேலும் நடிகை ஐஸ்வர்யா கூறுகையில், இந்த படக்குழுவினருடன் நடித்தது எனக்கு மிகவும் சந்தோசம், இந்த படத்துக்காக நிறைய உழைத்துள்ளேன்.  இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.  மேலும் படத்தின் இயக்குனர் கூறுகையில், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக விஷ்ணுவுடன் நான் இந்த படத்தில் இணைத்துள்ளேன்.  இந்த படம் இரு மொழிகளில் உருவாகுகிறது என்று கூறியுள்ளார்.  இதில் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | பாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளி விஜய் - சமந்தா முதலிடம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News