மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க இருக்கும் விஜயகாந்த்!

விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2021, 05:29 PM IST
மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க இருக்கும் விஜயகாந்த்! title=

வெற்றி படங்களை கொடுத்த விஜய் மில்டனின் இயக்கத்தின் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் உருவாகி கொண்டிருக்கும் படம் "மழை பிடிக்காத மனிதர்கள்".  இந்த படத்தில் மேகா ஆகாஷ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், தனஞ்செயா, ப்ருத்வி அம்பர், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து வருகிறார்.

ALSO READ | கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட களமிறங்கும் படங்கள்!

இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படம் 2014-ம் நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியாகி நல்ல வரப்பேற்பை பெற்ற 'சலீம்' படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.  

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜயகாந்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அரசியல் மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விஜயகாந்த் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். விஜயகாந்தின் பாதுகாப்பு நலன் கருதி அவரது வீட்டிலேயே அவர் நடிக்கும் காட்சிகளை படக்குழு படம்பிடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. 

vijaykant

இந்த செய்தியின் மூலம் விஜயகாந்தின் மாஸான ரீ-என்ட்ரி குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது விஜய் மில்டன் சிவராஜ்குமார் நடிக்கும் கன்னட படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.  சமீபத்தில் தான் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க வேண்டியது நான்தான்! ரகசியம் உடைத்த நடிகர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News