வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தற்காலிகமாக தளபதி 66 என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வாரிசு என்று அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டது. தளபதி விஜய்யின் பிறந்தநாள் தினமான ஜூன்-22 அன்று வாரிசு படத்தின் மூன்று விதமான போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதோடு, அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்து இருக்கிறது.
மேலும் படிக்க | முடிவுக்கு வந்த நயன் - விக்கி ஹனிமூன்! - பின்னணியில் யார் தெரியுமா?
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், மேலும் இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் மகேஷ் பாபு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஏற்கனவே சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது, அதாவது வாரிசு படத்தின் இசையமைப்பாளரான தமன் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான 'யூத்' படத்தில் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்த 'ஆல்தோட்ட பூபதி' பாடலை ரீமிக்ஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய், விவேக், சந்தியா, சிந்து மேனன் ஆகியோரது நடிப்பில் இந்த படம் 2002ம் ஆண்டு வெளியானது, இந்த 'ஆல்தோட்ட பூபதி' பாடலை மணி சர்மா இசையமைத்து இருந்தார்.
மேலும் படிக்க | ஆண்டிரியாவுடன் பிரேக் ஆப் ஆனது ஏன்? அனிரூத் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR