விஜய், அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஆவார்கள். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கர்களுக்கு பிறகு திரையரங்குகளுக்கு நம்பி போவது இவர்கள் படத்திற்கு தான்.சமீபத்தில் கூடிய தயாரிப்பாளர் சங்க மீட்டிங்கில் இனி ரஜினி, விஜய், அஜித் என யார் படம் வந்தாலும் 300 திரையரங்குகள் தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர் .
விஜய், அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஆவார்கள். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கர்களுக்கு பிறகு திரையரங்குகளுக்கு நம்பி போவது இவர்கள் படத்திற்கு தான்.
அஜித் தான் தற்போது இருக்கிற ஹீரோக்களில் அழகானவர், கிங் ஆப், மாஸ் ஹிரோ இப்படி பல பட்டங்கள் அவருக்கு உண்டு.
அதேபோல் விஜய் போல் நடனம், காமெடி, நடிப்பு, மாஸ் ஓபனிங் என்று எல்லாவற்றிலும் தனித்திறமை கொண்டவர் இவரை போன்று யாரும் நடிக்க முடியாது என்று தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சூப்பர் ஸ்டார்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் பாராட்டுக்கள் பெற்ற பெருமை இவருக்கு உண்டு.
இவர்கள் இருவருக்குமே ஒரு கோடிக்கு மேல் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே தமிழகத்தில் குறைந்தது 400 அல்லது 450 திரையரங்குகள் வரை ரிலிஸ் ஆகும்.
இந்நிலையில், சமீபத்தில் கூடிய தயாரிப்பாளர் சங்க மீட்டிங்கில் இனி ரஜினி, விஜய், அஜித் என யார் படம் வந்தாலும் 300 திரையரங்குகள் தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் இனி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைய கூட வாய்ப்பு உள்ளது. இதில், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்போம்!