வைரலாகும் நடிகை டாப்சி தங்கையின் பிகினி உடை போட்டோ!!

அக்காவை மிஞ்சும் இணையதளத்தில் வைரலாகும் தங்கையின் பிகினி போட்டோ

Written by - Shiva Murugesan | Last Updated : May 1, 2018, 07:13 PM IST
வைரலாகும் நடிகை டாப்சி தங்கையின் பிகினி உடை போட்டோ!! title=

2011 -ம் ஆண்டு "ஆடுகளம்" படம் மூலம் தமிழ் சினிமா துறையில் நுழைந்தார் டாப்சி பன்னு. இவர் நடித்த முதல் படம் "சும்மாண்டி நாதம்" என்ற தெலுங்கு ஆகும். இந்த படம் ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியானது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் என பிசியாக உள்ளார். தமிழில் இவர் "வந்தான் வென்றான்", "ஆரம்பம்", "காஞ்சனா 2"  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், டாப்சி பன்னுவின் தங்கை ஷகுன் பன்னு சினிமா துறையில் நுழைந்துள்ளார். அவரின் முயற்சிக்கு டாப்சியும் பெரிதும் துணைபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.  தற்போது சினிமாவுக்காக நடிப்பு, நடனம், சண்டைபயிற்சி ஆகியவற்றை கற்று வருகிறார் ஷகுன் பன்னு.

"ஜூட்வா 2" படத்தில் டாப்சியின் பிகினி போட்டோ பெரிதும் வைரலானது. தற்போது டாப்சியின் தங்கையான ஷகுன் பன்னு, நீச்சல் குளத்தில் மிதந்த படி,  கண்ணாடி அணிந்துக்கொண்டு பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News