பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மூத்த மகள் சோனம் கபூர், பல படங்களில் நடித்துள்ளார். இவர், தனது 13ஆவது வயதில் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனுஷ் பட நடிகை..
தனுஷ் முதன் முதலாக இந்தியில் நடித்திருந்த படம், ராஞ்சனா. இந்த படம், தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகியிருந்தது. நடிகை சோனம் கபூர், ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த ப்ளாக் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார், சோனம் கபூர். அனைத்து ஸ்டார் கிட்ஸ்களுக்கும் இருப்பது போன்று இவருக்கும் பெரிய ரசிகர் படை உள்ளது. பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார், சோனம். இதுவரை ரன்பீர் கபூர், அபிஷேக் பச்சன், அக்ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா என பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். இவர், தனது சிறுவயதில் நேர்ந்த கொடுமையான ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார்.
13 வயதில் பாலியல் சீண்டல்..
சோனம் கபூர் சமீபத்தில் சில திரை பிரபலங்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில் (Round Table Conference) கலந்து கொண்டார். அப்பாேது பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடிய பிறகு, பெண்கள் அடிக்கடி சந்திக்கும் பாலியல் வன்முறைகள் மற்றும் சீண்டல்கள் குறித்து சோனம் கபூர் பேசினார். சிறுவயதில், பலர் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக கூறிய அவர், தானும் 13 வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கூறினார்.
திரையரங்கில் நடந்த சம்பவம்..
சோனம் கபூர் தான் பங்குபெற்ற நிகழ்ச்சியில் தனக்கு சிறுவயதில் நடந்த சம்பவம் குறித்து பேசினார். அவருக்கு 13 வயது இருக்கும் போது நண்பர்களுடன் மும்பையில் உள்ள ஒரு பிரபலமான திரையரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது பின்னாள் இருந்த வந்த ஒருவர், சோனம் கபூரின் மார்பகத்தில் கையை வைத்துவிட்டு சென்றாராம். இதையடுத்து, தான் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றதாக கூறினார், சோனம் கபூர். அந்த நாள் முழுவதும் அதிகமாக அழுததாதகவும் தன் மீதுதான் தப்பு என கருதி வெகு நாட்களாக இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை என்று சோனம் கபூர் தெரிவித்தார. இதை நினைவு கூர்ந்த சோனம் கபூர், இது போல பலர் தங்களது சிறுவயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக கூறியுள்ளார்.
“கை-கால்களை நடுங்க வைத்தது..”
இளம் வயதிலேயே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவோருக்கு அது மறக்க முடியாத, ஆறாத வடுவாக மனதில் பதிந்து விடும் என சோனம் கபூர் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். மேலும், தனக்கு இந்த கொடுமை நேர்ந்த போது அந்த இடத்திலேயே அழுதுவிட்டதாகவும் தனது கை-கால்கள் நடுங்கியதாகவும் கூறினார். மேலும், இதை பற்றி இரண்டு, மூன்று வருடங்களுக்கு யாரிடத்திலும் தன்னால் பேச முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Robo Shankar: இதனால்தான் ரோபோ சங்கர் இப்படி மெலிந்தாரா? அவரே சொன்ன தகவல்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ