ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் 2021 டிசம்பர் 8 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,இயக்குனர் ஞானவேல், கலை இயக்குனர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரினார்.
மேலும் படிக்க | சங்கருக்கு முத்தம் கொடுத்து மைக் பஞ்சாயத்தை முடித்த பார்த்திபன் - வைரல் ட்வீட்
தேச ஒற்றுமையை சீர்குலைக்கவும், தேசப் பிரிவினையை உண்டு பண்ணவும், மக்களிடையே மத சாதி கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கத்தை காட்சிபடுத்தியும், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தியும், அவர்களை ஜெய்பீம் படம் இழிவு படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். பிற மக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கியும், வன்னிய சமூக மக்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும், குருவின் பெயரை இழிவுபடுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
வெளி நாட்டு மத மாற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தை நன்கொடை என்ற பெயரில் பெற்று, அகரம் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்து அந்த பணத்தில் ஜெய்பீம் படத்தை எடுத்தும், அதற்கு விளம்பர செலவாக ஒரு கோடி ரூபாய் காட்டி கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ள மனுதாரர், அந்நிய செலாவணி குற்றம் செய்தும், அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பதாக கூறியுள்ளார். இவை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் மனுதாரர் சந்தோஷ் நாயகர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிபதி, புகார் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20 ஆம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | வெளிநாடுகளில் பாட்டு எழுதினால் தீவே வாங்கலாம் ஆனால் இங்கு?... வைரமுத்து வேதனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR