மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!

Bison Kaalamaadan Movie: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு பைசன் காளமாடன் என பெயரிடப்பட்டுள்ளது. பூஜையுடன் இன்று படப்பிடிப்பு துவங்கி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2024, 12:00 PM IST
  • மாரி செல்வராஜின் புதிய திரைப்படம்.
  • 'பைசன் காளமாடன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
  • துருவ் விக்ரம் இந்த படத்தில் நடிக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்! title=

Bison Kaalamaadan Movie: இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு 'பைசன் காளமாடன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும்,  இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'பைசன் காளமாடன்'  திரைப்படம் இனிதே துவங்கியது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பின்னணி இசையே இல்லாமல் உருமாகும் புதிய தமிழ் படம்!

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடதக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாக கொண்டுவருகிறது. இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக சக்திகுமார், மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும், "பைசன் காளமாடன்", அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக,  மிக உன்னதமான  அனுபவத்தை வழங்கவுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் என பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். பெரிய பொருட்செலவில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வடிவேலு மற்றும் பகத் பாசில் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அரசியல் சார்ந்த படமாக உருவாகி இருந்த மாமன்னன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.  அந்த வகையில் உண்மை கதையை மையமாக வைத்து உருவாகும் பைசன் காளமாடன் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

மேலும் படிக்க | இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News