ரத்தான டங்ஸ்டன் சுரங்க ஏலம்.. கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!

டங்ஸ்டன் சுரங்க ஏலம் விட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Written by - R Balaji | Last Updated : Jan 23, 2025, 06:16 PM IST
  • டங்ஸ்டன் சுரங்க ஏலம் விட கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிந்தது
  • மத்திய அமைச்சருடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்தினர்
  • டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது
ரத்தான டங்ஸ்டன் சுரங்க ஏலம்.. கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!  title=

மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாப்படி உள்ளிட்ட கிராமங்களில்  டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அளித்திருந்தது. இதனை எதிர்த்து அரிட்டாப்பட்டி சுற்றியுள்ள கிராங்களில் உள்ள ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வலுவடைந்தது. மதுரையை நோக்கி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக பேரணியாக சென்றனர். 

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "தான் பதவியில் இருக்கும் வரை இத்திட்டத்தை கொண்டு வர விட மாட்டோம். 

தமிழகத்தில் டங்ஸ்டன் வருவதற்கான எந்த காரணமும் கிடையாது. அப்படி டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வர் பொறுப்பில் இருந்த் விலகி கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார். தமிழக எம்பி-க்களும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. 

மேலும் படிங்க: சாஹலை முந்திய அர்ஷ்தீப்.. இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய பவுலர்களின் பட்டியல் இங்கே!

மத்திய அமைச்சருடன் சந்திப்பு

இருப்பினும் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் நேற்று முன்தினம் (ஜன.21) போராட்டக்குழு நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க சென்றனர். 

நேற்று (ஜன.22) மத்திய அமைச்சரிடம் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்தி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மத்திய அமைச்சரும் பிரதமர் மோடியுடன் கலந்து ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் என கூறியிருந்தார். தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மகிழ்ச்சிகரமான செய்தி வரும் என தெரிவித்திருந்தார். 

மகிழ்ச்சிகரமான செய்தி

இந்த நிலையில், இன்று (ஜன.23) டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 48 கிராம மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக உள்ள நிலையில், போராட்டம் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் இனிப்புகளை வழங்கி கிராம மக்கள் கொண்டாடி  வருகின்றனர்.  

மேலும் படிங்க: தினமும் வெள்ளை எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News