Budget 2025: மாத சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள்... நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர்?

Union Budget 2025: சம்பள வர்க்க மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட்டில் இவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? முக்கிய 6 எதிர்பார்ப்புகளை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2025, 06:13 PM IST
  • வரி செலுத்தும் சாமானிய சம்பள வர்க்க மக்கள், வரி சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள்.
  • வரிகளின் அளவு குறைந்தால், அவர்களின் செலவழிப்பு வருமானம் அதிகமாகும்.
  • கடந்த சில பட்ஜெட்டுகளிலும், இதே போன்ற எதிர்பார்ப்புகள்தான் இருந்தன.
Budget 2025: மாத சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள்... நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர்? title=

Union Budget 2025: நாட்டு மக்கள் அனைவரும் மத்திய பட்ஜெட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமர் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்வார். அவர் 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2024 க்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

வழக்கத்தை போலவே, இந்த ஆண்டும், அனைத்து தரப்பு மக்களும், நிதி அமைச்சர் தங்களுக்காக என்னென்ன அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் என ஆவலோடு காத்திருக்கிறார்கள். சம்பள வர்க்க மக்கள், நடுத்தர மக்கள், பெண்கள், மூத்த முடிமக்கள், வணிகர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் பிரத்யேகமான எதிர்பார்ப்புகள் உள்ளன. 

Taxpayers: வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்பு என்ன?

இருப்பினும், அனைத்து வகைகளிலும், மாத சம்பளம் வாங்கும் வரி செலுத்தும் நபர்களுக்கு இந்த முறை அதிக சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் நிதி அமைச்சரிடம் சில நியாயமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். சம்பள வர்க்க மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட்டில் இவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? முக்கிய 6 எதிர்பார்ப்புகளை இங்கே காணலாம்.

- Tax Concessions: வரிச்சலுகைகள்

வரி செலுத்தும் சாமானிய சம்பள வர்க்க மக்கள், வரி சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். வரிகளின் அளவு குறைந்தால், அவர்களின் செலவழிப்பு வருமானம் அதிகமாகும். கடந்த சில பட்ஜெட்டுகளிலும், இதே போன்ற எதிர்பார்ப்புகள்தான் இருந்தன. அவை முழுமையாக நிறைவேறாத நிலையில், இந்த பட்ஜெட்டிலாவது, தங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

- Tax Exemption: வரி விலக்குகள்

வரி செலுத்தும் தனி நபர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பங்குகொண்டவர்களில் 57% பேர் தனிநபர் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கிறார்கள். மறுபுறம் சுமார் 25% பேர் 2025 பட்ஜெட்டில் அதிக விலக்கு வரம்புகளை எதிர்பார்க்கிறார்கள்.

- New Tax Regime: புதிய வரி முறை

அரசாங்கம் புதிய வருமான வரி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அதை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அரசு 2025 ஆம் ஆண்டில் வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என பெரும்பாலான வரி செலுத்துவோர்  பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இந்த வரி விதிப்பு முறையில் விலக்குகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.

- Targeted Benefits: இலக்கு சார்ந்த சலுகைகள்

அதிக சம்பள வர்க்கத்தினர், குறிபிட்ட இலக்குகளை சார்ந்த சலுகைகள் எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாக, NPS விதிகளை மேம்படுத்துதல், தனிநபர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்க மின்சார வாகங்களுக்கு வரிச் சலுகைகள்/மானியங்களை அறிமுகம் செய்தல் ஆகியவை முக்கிய விருப்பங்களாக உள்ளன.

- Extended Deadlines: காலக்கெடு நீட்டிப்பு

பெரும்பாலான சம்பள வர்க்கத்தினர் திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் நீட்டிக்கப்பட்ட வேண்டும் என விரும்புவதாக தெரியவந்துள்ளது.

- Lowering Additional Tax on Updated Returns:  கூடுதல் வரி குறைப்பு

அப்டேடட் அதாவது புதுப்பிக்கப்பட்ட வருமான வரி கணக்குகளுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி/அபராதத்தைக் குறைக்க வேண்டும் என்பதும் சிலரது கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க | Budget 2025: வரிச்சலுகை குறித்த பெரிய அறிவிப்பு... அதிக லாபகரமானதாக மாறப்போகும் NPS

மேலும் படிக்க | Budget 2025: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு டபுள் குட் நியூஸ்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News